திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் கலெக்டர் அறிவிப்பு.

Pradeepa 2 Views
0 Min Read

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமநு தாக்கல் இன்று 12.03.2021 (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாணியம்பாடி தொகுதிக்கு வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திலும்,
ஆம்பூர் தொகுதிக்கு ஆம்பூர் தாலுகா அலுவலகத்திலும், ஜோலார்பேட்டை தொகுதிக்கு நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்திலும், திருப்பத்தூர் தொகுதிக்கு திருப்பத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி இணையதளம் வாயிலாகவும் வேட்பு மனுக்களை உரிய ஆவணங்களை இணைத்து தாக்கல் செய்யலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்..

Share This Article
Exit mobile version