தினகரன் பிரச்சாரம் அதிமுகவிற்குச் சாதமாக அமையும் என மக்கள் கருத்து

Pradeepa 2 Views
1 Min Read

வேலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்.

சிறுபான்மையின மக்களுக்குத் துரோகிகளாக இருக்கும் திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். திமுக ,அதிமுக போன்ற துரோகி கட்சிகள் ஒழிய வேண்டும்.

சமூக நீதி மற்றும் சம உரிமை என்ற கோட்பாட்டில் ஆட்சியை நடத்த மக்கள் வரும் தேர்தலில் எங்கள் கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊழலற்ற மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

செல்லும் கூட்டங்களில் அதிமுக அமைச்சர்களைக் கலாய்த்தாலும், தினகரன் திமுகவைச் சாடியே அதிகளவில் வாக்கு சேகரித்து வருகிறார். இதன் காரணமாகத் தினகரன் பிரச்சாரம் அதிமுகவிற்குச் சாதமாக அமையும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

Share This Article
Exit mobile version