Paytm-யின் அசத்தலான ஆஃபர் LPG சிலிண்டரை வெறும் 9 ரூபாய்க்கு வாங்கலாம்.

Selvasanshi 4 Views
2 Min Read

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்து கொண்டே இருப்பதால் சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது என்று கூறலாம். தற்போது 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 809 என்ற அளவில் உள்ளது.

இந்தநிலையில், அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் பேடிஎம் (Paytm) ஒரு அசத்தலான ஆஃபரை கொண்டுவந்து இருக்கிறது.

நீங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான Paytm மூலம் முதல்முறையாக LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது உங்களுக்கு 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.

இதன் மூலம் LPG சிலிண்டர் முன்பதிவின் கட்டணத்தை Paytm மூலம் செலுத்தும் போது, 809 ரூபாயாக இருக்கும் ஒரு சிலிண்டரை டெல்லியில் ரூ.9 என்ற விலைக்கு பெறலாம்.

இந்த சலுகை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த சிலிண்டர் முன்பதிவுக்கு Paytm வழங்கியுள்ள சலுகையில் சில நிபந்தனைகள் அடங்கி உள்ளது.

முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்து, Paytm மூலம் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் இதனால் வாடிக்கையாளருக்கு ரூ.800 கேஷ்பேக்கிற்கான ஒரு ஸ்க்ராட்ச் கார்டு (scratch card) கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த சலுகை முதல் எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவுக்கு மட்டுமே பொருந்தும்.

கேஷ்பேக்கிற்கு, நீங்கள் ஸ்க்ராட்ச் கார்டை ஓபன் செய்ய வேண்டும். நீங்கள் பில் கட்டணம் செலுத்திய பிறகு கேஷ் பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் தொகை 10 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை இருக்கலாம். இந்த ஸ்ராட்ச் கார்டை 7 நாட்களுக்குள் ஓபன் செய்ய வேண்டும். 7 நாட்களுக்கு பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது.

கேஷ்பேக் (Cash back) சலுகையை பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்:

  1. உங்கள் மொபைல் போனில் Paytm செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  2. உங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு Paytm செயலியில் Show More என்பதை கிளிக் செய்யவும்.
  3. பிறகு ரீசார்ஜ் மற்றும் கட்டண பில்கள் என்பதைக் கிளிக் செய்யும்.
  4. இங்கு சிலிண்டரை பதிவு செய்வதற்கான ஆப்ஷனை நீங்கள் பார்ப்பீர்கள். அதில் உங்கள் எரிவாயு சப்ளையரை தேர்ந்தெடுக்கவும்.
  5. சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் FIRSTLPG என்ற விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும்.
  6. முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் ஸ்க்ராட்ச் கார்டு (scratch card) கிடைக்கும்.
  7. இந்த ஸ்ராட்ச் கார்டையை 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். 7 நாட்களுக்கு பிறகு இதைப் பயன்படுத்த முடியாது.
Share This Article
Exit mobile version