நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்க்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் கூடங்குளம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) ஜெனரேட்டர் பொருத்தும் பணி தொடங்குகிறது. கூடங்குளம் அரசு மருத்துவமனையில் இன்னும் 10 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.