ஆக்சிஜன் சிலிண்டர்,ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை

Pradeepa 3 Views
1 Min Read

ஹைலைட்ஸ்

  • 19 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது
  • 10 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 11 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை
  • ரெம்டிசிவர் மருந்து உற்பத்தி 34 லட்சத்தில் இருந்து 74 லட்சமாக உயர்ந்து உள்ளது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பத்தொன்பது மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் குறைபாட்டால் கொரோனா நோயாளிகளின் இறப்பு அதிகரிக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் 10 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 11 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தடுப்பு மருந்துகளை விரைவில் கொண்டு செல்லவும், நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லவும் மத்திய அரசு விமானப்படையின் உதவியை நாடியுள்ளது.

ஆக்சிஜன் நிரப்ப காலி டேங்கர் பெட்டிகள் சிறப்பு ரயில்கள் மூலம் லக்நோவில் இருந்து பொக்காரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரெம்டிசிவர் தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மாதத்தோறும் 38 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பு மருந்து எண்ணிக்கை 74 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரெம்டிசிவர் தடுப்பு மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

Share This Article
Exit mobile version