தமிழக அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
கொரோனோ பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் , கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. இதில் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும் தெரிவித்திருந்து.
இது தொடர்ப்பாக, பல்கலைக்கழக மாணியக் குழுவுக்கு எதிராக இவ்வாறு தேர்வுகளை ரத்து செய்வது முரணானது என தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது.
இதற்கான வழக்கு விசாரணையில் ஏற்கெனவே ஆஜராகியிருந்த யுஜிசி சார்பு செயலாளர் உமாகாந்த் பலுனி, தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்.
மேலும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்றும், தேர்வு நடத்துவதை பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அரியர் தேர்வுக்கு எத்தனை மாணவர்கள் விண்ணப்பித்தார்கள், எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை பல்கலைக்கழக வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.மேலும், அரியர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்குகளை ஏப்ரல் 15க்கு தள்ளிவைத்து உள்ளார்கள்.