ஒலிம்பிக்ஸ் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு பதக்கத்துடன் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன் அவரது பயிற்சியாளர் விஜய் சர்மா உடன் இருந்தார். அப்போது விமான நிலையத்திற்கு வந்த விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர். மீராபாய் சானுவுக்கு RTPCR கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பேட்டியளித்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக பயிற்சி எடுத்து வந்ததாக குறிப்பிட்டார்.
டோக்கியோவில் போட்டி கடுமையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே மீராபாய் சானுவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளதோடு மாநில காவல்துறை உதவி காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. பளு தூக்குதலில் 2000 ஆண்டு சிர்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் அதன் பின்னர் 2000 ஆண்டு சீர்னி ஒலிம்பிக்கில் கர்ண மல்லேஸ்வரி பதக்கம் வென்ற நிலையில் அதன் பின்னர் 21 ஆண்டு கால காத்திருப்புக்கு மீராபாய் சானு முடிவு கட்டியதாக பலரும் புகழாரம் சுட்டிவருகின்றனர்.