Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் OLA நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கிருஷ்ணகிரிக்கு 100 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் தொடங்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் OLA நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் OLA நிறுவன தலைமை செயல் அதிகாரி Bhavish Aggarwal முதலமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம், OLA நிறுவனத்தின் துணை தலைவர் பி.சி.தத்தா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share: