+2 பொதுத்தேர்வு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா? – அதிகாரிகள் ஆலோசனை

Selvasanshi 1 View
1 Min Read
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில் மே 3-ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • தற்போது தமிழகத்தில் மே 3-ஆம் தேதி நடைபெற இருந்த +2 தேர்வு மொழிப்பாடம் மட்டும் மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.
  • மே 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை. இதனால் முதல் தேர்வு மே 31-ஆம் தேதியும், இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது.
  • ஆனால் தற்போது கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்ககளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
  • இதனால் +2 பொதுத்தேர்வை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
  • இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share This Article
Exit mobile version