வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் – உயர் நீதிமன்றம்

Pradeepa 3 Views
1 Min Read

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை மே 2 ஆம் தேதிக்கு முன்னதாக எண்ண தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருந்தது. இதற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டுயிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் பொது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசுனி கொண்டு காய் கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்ததே காரணம் என்று உயர் நிதி மன்றம் கூறியுள்ளது.

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் ஆலோசனை தடத்தி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விட்டால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Share This Article
Exit mobile version