நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் நூக்கல்

Selvasanshi 1 View
2 Min Read

ஹைலைட்ஸ்:

  • நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவு நன்மை தரும்.
  • நூக்கல் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் தன்மைக் கொண்டது.
  • நம் உடலில் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கும்.

அன்றாட உணவில் நாம் காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பெரும்பாலான காய்கறிககளை நாம் சமைத்து சாப்பிடுவதே இல்லை. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் தாய்மார்கள் பலரும் நாட்டு காய்கறிகளை விரும்பி சமைப்பதில்லை. நாட்டு காய்கறி வகையில் நூக்கல் காய்கறியும் ஒன்றாகும்.

நூக்கல் என்ற பெயரையே கேள்விப்பட்டது இல்லை என்று சிலர் கூறுவதை நாம் கேள்வி பட்டுயிருப்போம். ஆனால் நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவில் நன்மைகளை தரக்கூடியது என்று பலருக்கும் தெரியாது ஒன்றாகும்.

நாம் தினமும் நூக்கலை சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

நூக்கலை அடிக்கடி நம் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இருக்கும். இந்த வகையான காய்கறிகளை உட்கொள்வதால் உடலின் உஷ்ண தன்மை குறையும்.

நூக்கலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது. நூக்கலை நம் அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் நம் உடலில் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் நூக்கலை தினமும் சாப்பிட்டுவந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பொதுவாக நூக்கல் குடல் நாளங்களை பலமடையச் செய்யும் மிகச்சிறந்த காய் ஆகும்.

நூக்கலில் நார்ச்சத்து மிகுந்து இருக்கும். நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் இயல்பாகவே செரிமான பிரச்சனையை சீராக்கும். அந்த வகையில் நூக்கலும் ஒன்று.

நூக்கல் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் தன்மைக் கொண்டது. மேலும் இது வயிற்றுப்புண்களுக்கு காரணமான இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்.

நூக்கலை தினமும் சமைத்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கலாம். மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் பிஞ்சு நூக்கலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நூக்கல் நுரையீரல் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளையும் சரிசெய்யும். நூக்கல் கீரையில் விட்டமின் ‘ஏ’ சத்து அதிகமாக நிறைந்து காணப்படும். இது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவக்கூடியது .

மேலும் நூக்கலின் வேர்ப்பகுதிகளும் நம் உடலுக்கு பெரிதும் உதவுகிறது. வேர்ப்பகுதியில் இருக்கும் பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்க செய்கிறது.

நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் எலும்புகளும் உறுதியாகும்.

Share This Article
Exit mobile version