2022 ஆம் ஆண்டின் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை அளிக்கலாம்..!

Selvasanshi 13 Views
1 Min Read

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உயரிய விருதுகளுக்கான பரிந்துரைகளை அதன் அதிகாரப்பூர்வ https://padmaawards.gov.in இணையதளத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பத்மவிருதுகளானது கல்வி, அரசியல், இலக்கியம், விளையாட்டு, அறிவியல், பொதுப்பணி, சமூக சேவை, கலை, வர்த்தகம், மருத்துவம் போன்ற பல துறைகளில் சிறந்த சாதனைகளையும் அதன் எல்லைகளையும் அடைந்தவர்களுக்காக வழங்கப்படும் விருது என்பதால் பல்வேறு துறையிலிருந்து யாரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம் எனவும் தனி நபர் பரிந்துரைகளும் அனுமதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விருதானது 2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் பெயர்களை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை அறிய www.mha.gov.in என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Share This Article
Exit mobile version