வட்டி கடன் தள்ளுபடி கிடையாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Selvasanshi 1 View
2 Min Read
  • கொரோனா கால கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டு மார்ச் 23–ந் தேதி அன்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வங்கி சேவைகள் முடங்கியதோடு, வங்கி கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.
  • ஆனால் வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டியாக கூட்டு வட்டித் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • மேலும் கொரோனா காலத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள், கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்திருந்தது.
  • அந்த கால கட்டத்தில் வட்டியை செலுத்தாமல், ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
  • இந்த மனு தாக்கலை அசோக்பூஷண் மற்றும் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்ந்து விசாரித்தது. கடந்த ஆண்டு டிச.,17 ல் இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
  • நீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை இன்று வழங்கியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வருவாய் இழப்பு ஏற்பட்டது.
  • மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நிதி கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. முழு வட்டியை தள்ளுபடி செய்தால் அது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து இருந்தார்கள்.
  • கடன் தவணை சலுகை காலத்தில் வாடிக்கையாளரகள் கடன் தவணை செலுத்த சலுகை பெற்றிருந்து அவர்களிடம் இருந்து கூடுதல் வட்டி அல்லது அபராத வட்டி வசூலிக்கப்பட்டு இருந்தால், அதனை வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
  • மேலும் கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
Share This Article
Exit mobile version