ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி வரி இல்லை – நிர்மலா சீதாராமன்

Selvasanshi 1 View
1 Min Read

டெல்லியில் இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த காணொலி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றார்கள். காணொலி காட்சி மூலம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி கூறினார்.

அதாவது கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து, ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர், வெண்டிலேட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், கொரோனா பரிசோதனை கருவி, வெப்பநிலை பரிசோதனை, சானிடைசர் உள்ளிட்ட பெரும்பாலான கொரோனா தடுப்பு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு 75 % தடுப்பூசிகளை வாங்கும்போது அதற்கான ஜிஎஸ்டி வரி செலுத்தப்படும். இதில் இருந்து கிடைக்கும் 70% வருமானம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் உடன் இருந்தார்.

Share This Article
Exit mobile version