- Advertisement -
SHOP
Home Blog Page 138

எடை இழப்புக்கான 8 சிறந்த பயிற்சிகள்

இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு இல்லாதா வாழ்கை வாழ்கிறோம். அதனால்  உடல் ரீதியான நிறைய பிரச்னைகளை நம் வாழ்வில் சந்தித்து கொண்டு இருக்கிறோம். இன்று எந்நேரமும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவற்றின் முன் தான் பலரும் இருக்கிறோம். இதன் விளைவாக பல விதமான நோய்களை பெறுகிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் உடற்பயிற்சி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை குறையும், எலும்புகள் உறுதியாகும்,ரத்தஅழுத்தம் குறையும், உடல் உறுப்புகளை உயிர்ப்புடன் வைத்து இருக்க முடியும்.

உடல் எடை குறைய 8விதமான உடற்பயிற்சிகள் உள்ளன.

1.நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை கண்டிப்பாக குறையும்.தற்போது உடலுக்கு உழைப்பு என்பது உடற்பயிற்சியின் மூலம் தான் கிடைக்கிறது. எனவே உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி.

70 kg எடையுள்ள ஒருவர் தினமும் 30 நிமிடம்  4 mph (6.4 km/h) (5) நடைப்பயிற்சி செய்தால் 167 கலோரியை எரிக்க முடியும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். காலை அல்லது மாலை  செய்யது வந்தால் பல நன்மைகளை பெற முடியும். உடல் பருமனான பெண்கள் 50-70 நிமிடம் ஒரு வாரத்திற்கு 3 முறை நடைப்பயிற்சி செய்து வந்தால் உடல் கொழுப்பு 1.5% and 1.1 inches (2.8 cm) குறையும்.

தினமும் காலையில் வாக்கிங் (morning walking benefits) செய்வதினால் எலும்புகள் வலு பெறும்.மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வேகமாக நடந்தாலே போதும்.

2.ஜாகிங் அல்லது ரன்னிங்

உடலின் அதிகப்படியான எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஜாகிங் அல்லது ரன்னிங்  என்பது சிறந்த பயிற்சி ஆகும். 70 kg எடையுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு 8 km ரன்னிங் செய்வதன் மூலம் 298 கலோரியை எரிக்கலாம்.

ஜாக்கிங் செய்வதை பழக்கமாக வைத்து கொண்டால் அலர்ஜி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராது. ரன்னிங் பழக்கத்தை வழக்கமாக கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்காது. மேலும் எலும்புகள் வலுப்பெறும், உடல் எடை குறையும்,மனஅழுத்தம் குறையும்.

3. சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றன.

முந்தய காலத்தில் சைக்கிள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இன்றைய சூழலில் உடற்பயிற்சி நிலையங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.

சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்,மூளையின் செயல்திறன் அதிகரிக்கும, மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

4.எடை பயிற்சி

30 நிமிடம் எடைப்பயிற்சி செய்வதன் மூலம் 112 கலோரி எரிக்க முடியும். எடைப்பயிற்சி செய்வதால் தசை வளர்ச்சி அடையும், உடல் வலுப்பெறும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

ஒரு நாளைக்கு 11நிமிடம் வாரத்திற்கு 3 முறை பயிற்சி செய்வதால் 7.4%வளற்சிதை மாற்றம் அதிகரிக்கிறது . ஆண்கள் 24 வாரம் எடை பயிற்சி செய்வதால் 9% வளர்சிதை மற்றம் அதிகரிக்கிறது.எடை பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும்.

5. இடைவெளி பயிற்சி

இடைவெளி பயிற்சி என்பது அதிக தீவிரம் இடைவெளி பயிற்சி(HIIT) என்று கூறலாம். இந்த அதிக இடைவெளி பயிற்சி10-30 நிமிடத்தில் செய்யும் போது  அதிக கலோரி எரிக்க முடியும். மற்ற உடற்பயிற்சி  விட அதிகமாக 25-30% கலோரியை  எரிக்கலாம்.

இந்த இடைவெளி பயிற்சி மற்ற பயிற்சிகளை விட குறைந்த நேரத்தில் செய்யலாம்.இடைவெளி பயிற்சியின் மூலம் வயிற்று கொழுப்பை கரைக்க பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

6. நீச்சல்

நீச்சல் என்பது உடல் எடையை குறைத்து வடிவம் பெற ஒரு அற்புதமான வழியாகும். ஹார்வர்ட் ஹெல்த் என்பவர் 70kg எடையுள்ள ஒருவர் நீச்சல் 30 நிமிடம் செய்தால் 233 கலோரிகளை எரிக்க முடியும் என்று கூறுகிறார்.

30 நிமிடங்களுக்கு, 155 பவுண்டுகள் (70-கிலோ) ஒருவர் 298 கலோரிகளை பேக்ஸ்ட்ரோக் செய்கிறார், 372 கலோரிகள் மார்பக ஸ்ட்ரோக் செய்கிறார், 409 கலோரிகள் பட்டாம்பூச்சி செய்கிறார், 372 கலோரிகள் தண்ணீரை மிதித்து (5) எரிக்கிறார். ஒரு வாரத்திற்கு 60 நிமிடங்கள் 3 முறை நீச்சல் செய்வதால்  உடல் கொழுப்பைக் குறைத்தது விடும் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

7. யோகா

யோகா உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்க ஒரு பிரபலமான வழியாகும். யோகா பயிற்சி (5) 30 நிமிடங்களுக்கு 155 பவுண்டுகள் (70 கிலோ) ஒருவர் சுமார் 149 கலோரிகளை எரிக்கிறார் என்று ஹார்வர்ட் ஹெல்த் மதிப்பிடுகிறது.

யோகா நினைவாற்றலைக் கற்பிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஞாபக சக்தி (Memory), மனக்குவிப்புத் திறன் (Focus / Concentration) மற்றும் செயற்திறனை அதிகரிக்கிறது. உடல், மனம் மற்றும் உணர்வுகளை நிலைப்படுத்துகிறது.

மன அழுத்தம் (Depression) , படபடப்பு, மனத்தவிப்பு (Anxiety) ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.

8.பைலேட்ஸ்

பைலேட்ஸ் ஒரு சிறந்த தொடக்க  உடற்பயிற்சி ஆகும், இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.உடற்பயிற்சிக்கான ஆய்வின் படி சுமார் 140 பவுண்டுகள் (64 கிலோ) எடையுள்ள ஒருவர் 30 நிமிட தொடக்க பைலேட்ஸ் வகுப்பில் 108 கலோரிகளை எரிப்பார் என்று கூறுகின்றனர்.

எடை இழப்பு தவிர, பைலேட்ஸ் குறைந்த முதுகுவலியைக் குறைத்து, உங்கள் வலிமை, சமநிலை, நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த உடற்பயிற்சி நிலை ஆகியவற்றை மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.

பைலேட்ஸுடன் எடை இழப்பை மேலும் அதிகரிக்க, ஆரோக்கியமான உணவு அல்லது எடை பயிற்சி அல்லது கார்டியோ போன்ற பிற உடற்பயிற்சிகளுடன் இதை இணைக்கவும்.

கொரோனா வைரஸ் அரசு பரபரப்பு அறிவிப்பு

உருமாறி புதியதாக வந்து இருக்கும் கொரோனா வைரஸ். பொதுவாக வைரஸ் என் உருமாறுகிறது. வைரஸ் என்பது ஒரு நுண்கிருமி மனித உடலுக்குள் பரவி செல்களுக்குள் செல்லும். செல்களோடு ஒட்டி தானும் வளர்த்து மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

 

வைரஸ் எப்போதும் மனித செல்கள்களோடு ஒட்டிக்கொண்டு தன்னை புதுப்பிக்கும் அதாவது தன்னை உருமாறிக்கொள்ளும். இந்த ஒரு நுண்கிருமி கண்ணுக்கு புலப்படுவது இல்லை. மனித உடலுக்குள் செல்லும் போது விருசு உடைய வீரியம் குறைவதே இல்லை.

எளிமையாக மனித உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் மட்டும் தன்னை உருமாற்றிக்கொள்வது இல்லை மற்ற வைரஸ்களும் தன்னை உருமாற்றி கொள்கிறது. காய்ச்சலை ஏற்பதும்

வைரஸ் உருமாறுவதை விட கொரோனா வைரஸ் உருமாறும் விதம் குறைவாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.அதானல் பயப்பட தேவை இல்லை எச்சரிக்கை தேவைப்படுகிறது.

உருமாறிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உருமாறிய கொரோனா வைரஸ்க்கு சக்தி அதிகமாக இறுக்கமா என்ற கேள்வி எழும்புகிறது.

கொரோனா வைரஸ் தன்னுடைய உருவத்தை மாற்றி கொண்டதே தவிர சக்தி அதிகமாகவில்லை. உருமாறியதால் மனித உடலில் பாதிப்பை அதிகமாக ஏற்படுவது இல்லை. விரைவாக பரவுவதற்கு வடிவத்தை மாற்றி கொண்டதை தவிர பாதிப்பை அதிகரிக்கவில்லை.

இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும். பழைய தடுப்புப்பூசி உதவுமா என்று கேட்டால் கண்டிப்பாக உதவும். புதிய கொரோனா வைரஸ் வேகமாக வரவும் ஆனால் வீரியம் அதேதான் பயப்பட தேவையில்லை பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

இன்னும் தடுப்பூசி வழங்காத நாடுகளும் உள்ளன. இந்தியாவில் இன்னும் கொரோனா தடுப்பூசி வழக்கப்படவில்லை. இந்திய போன்ற பின்தங்கிய நாடுகளில் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

புதிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த அனைவர்க்கும் மரபணு சோதனை கடந்த 14 நாடுகளாக நடத்தப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. மரபணு சோதனை நடத்த நாடு முழுவதும் 10 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிளான் மற்றும் அதற்கான OTT நன்மைகள்

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிளான் மற்றும் அதற்கான OTT நன்மைகளை பற்றி பார்ப்போம். ஏர்டெல்லின் ஆண்டு ப்ரீபெய்ட் திட்டமானது Rs.2698 உடன் OTT இலவசம். இந்த திட்டம் மூலம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP உறுப்பினரின் முழு ஓராண்டு சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது..!

 

அனைத்து தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் OTT தளங்களுடன் இணைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டர் ஆன ஏர்டெல்லும் (Bharti Airtel) பல ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் OTT சந்தாவை வழங்குகிறது.

 

பல OTT பயன்பாடுகளை கொண்டு உள்ள ஒரே நிறுவனம் ஏர்டெல் மட்டுமே.கூடுதலாக, ஆபரேட்டர் Zee 5 பிரீமியம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP போன்ற OTT பயன்பாடுகளுடன் ஆயுள் காப்பீட்டு சலுகைகளையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் முதல் OTT பிளான் Rs.289 விலையிலான பேக், இது  ZEE5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற அழைப்பு, 1.5GB டேட்டா, 100 குறும் செய்தி 28 நாட்களுக்கு வழங்குகிறது.

zee5 சந்த சேர்க்கை ஏர்டெல் தேங்க்ஸ்(airtel thanks )ஆப் மூலம் பெறலாம். கூடுதலாக, ஒரு எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங்க் மியூசிக் மற்றும் FASTag-ல் ரூ.100 கேஷ்பேக் ஆகியவற்றைப் பெறலாம். பின்னர் Rs .349 பிளான் அமேசான் பிரைம் சந்தா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 குறும்செய்திகளை  28 நாட்களுக்கு வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை கொண்டுள்ளது.

ஏர்டெல் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு Rs .401 திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டங்கள் 30GB டேட்டாவை  28 நாட்களுக்கு வழங்கும். கடைசியாக, ரூ.448 திட்டம், அதே காலகட்டத்தில் ஒரு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா மற்றும் ஒரு நாளைக்கு 3GB டேட்டாவை  வழங்கும்.

கலர் வாக்காளர் அடையாள அட்டை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை

வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணம். இந்தியாவின் தேர்தல் ஆணையம் 18 வயது பூர்த்தியான அனைவர்க்கும் வாக்காளர்  அடையாள அட்டை தரப்படுகிறது. தேர்தல் ஆணையம்  black and white வாக்காளர் அடையாள அட்டை தரப்பட்டது.

தற்போது இந்திய தேர்தல் ஆணையம் புதிய color வாக்காளர் அடையாள அட்டை அறிமுகபடுத்தி உள்ளது. இதை இணையத்தளத்தின் மூலம் பழைய வாக்காளர் அடையாள அட்டையை புதிய color அடையாள அட்டையாக மாறிக்கொள்ளலாம்.

இதற்கான இணைய தளத்தின் பெயர்  https://www.nvsp.in/

புதிய color வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

முகவரி ஆதாரம் (address proof )

 

வயது ஆதாரம் (age proof) நீங்கள் பதினோடு வயது பூர்த்தி ஆனவரா என்பதை அறிந்து                           கொள்ளும் ஆதாரம்

புகைப்படம் (photo)

புதிய color வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

* முதலில் https://www.nvsp.in/ என்ற இணையத்தளத்தை பயன்படுத்தவும்.

* அதில் voter portal என்பதை கிளிக் பண்ணவும் (https://voterportal.eci.gov.in/)

* புதிதாக விண்ணப்பிப்பதற்கு ‘Apply online for registration of new voter’ என்பதைத்                                              பயன்படுத்தவும்.

* இதில்  உங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்களை உள்ளிட்டு                                        அவற்றுக்குத் தேவையான ஆவணங்களைப் பதிவு  செய்யவும்.

* அனைத்தும் பூர்த்தி செய்தவுடன் ’Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்தவுடன் tracking id விண்ணப்பதாரர் உடைய மொபைல்  எண்ணிற்கு                                       மின்னஞ்சலுக்கும் தகவல் அனுப்பப்படும்.

 

 

 

 

நோக்கியா பியூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் இதன் விலை ரூ 59,990.

நோக்கியா முதன்முறையாக இந்தியாவில் லேப்டாப் பியூர்புக் எக்ஸ் 14 என்ற மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.59,990 நிர்ணயத்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பார்போமா .

  • 14 இன்ச் 1920×1080 பிக்சல் FHD எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, டால்பி விஷன் 1.6
  • ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5-10210U பிராசஸர்
  • இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
  • 8 ஜிபி DDR4 2666MHz ரேம்
  • 512 ஜிபி NVMe எஸ்எஸ்டி மெமரி
  • ஹெச்டி ஐஆர் வெப்கேமரா
  • பில்ட்-இன் டூயல் மைக்ரோபோன்
  • பேக்லிட் கீபோர்டு
  • விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
  • வைபை, ப்ளூடூத் 5.1
  • யுஎஸ்பி 3.1 x2 / யுஎஸ்பி 2.0 x 1 / யுஎஸ்பி டைப் சி 3.1 x1
  • HDMI x 1, RJ45 x 1, ஆடியோ அவுட் x 1, மைக் இன் x 1
  • டூயல் ஸ்பீக்கர்கள், ரியல்டெக் ஹெச்டி ஆடியோ, டால்பி அட்மோஸ்
  • 46.7Wh பேட்டரி
  • 65 வாட் சார்ஜிங்

நோக்கியா பியூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் மேட் பிளாக் பினிஷிங் கொண்டுள்ளது. நோக்கியா பியூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் பிலிபிகர்ட் தலத்தில் முன்பதிவு நடைபெற்றுக் கொண்டுருக்கிறது .

15 நாட்களுக்கு மேலும் விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை ஜனவரி 15 வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது ஜனவரி 31 வரை தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளன.உருமாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த முடிவு எடுக்க பட்டது என விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

கிருமி தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உள்நாடு போக்குவரத்து கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த தடை உத்தரவு சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கு பொருந்தாது என கூறியுள்ளன.

பஜாஜ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய இருசக்கர வாகனம்

பஜாஜ் நிறுவனம் புதியதாக இருசக்கர வாகனம் தயாரிக்கபடுவதாக உள்ளது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் (ktm)கேடிஎம் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. (DUKE )ட்யூக் மற்றும் (RC)ஆர்சி வகைக்கயிலான மோட்டர் சைக்கிள் தயாரிக்கப்படுகின்றன.

புதியதாக அறிமுகம் செய்ய இருக்கிற இருசக்கர வாகனங்களை பற்றி பார்ப்போம். மேற்குறிய வாகனங்களுடன் புதிதாக பஜாஜ் நிறுவன ஆலையில் கேடிஎம் நிறுவனத்தின் மோட்டர்சைக்கிள் அறிமுகமாக உள்ளது. பெயரிடப்படாத 500சிசி திறன் கொண்ட பைக்கே தயாரிக்க இருக்கிறது. கேடிஎம் நிறுவனம் இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பஜாஜ் நிறுவனம் அலையில் கேடிஎம்(KTM) வாகனங்கள் மட்டும் அல்லாமல் பிரிமியர் ரக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. பிரிமியர் ரக வாகனங்களுக்கு சொந்தக்காரர் ஹஸ்க்வர்னா(Husqvarana) ஆவர்.

கடந்த 2020 நவம்பரில் மட்டும் 8000 வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி உள்ளது. இது குறித்த தகவல்களை அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பஜாஜ் ஆர்&டி -யின் தலைமை அதிகாரி உறுதி செய்தார். 490சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் கொண்ட பைக்கை ஆஸ்திரியா நாட்டு நிறுவனத்தின் உதவியுடன் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.

புதிய பைக்கின் உற்பத்தி பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால் விரைவில் இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்கு வருவது உறுதி என்பது தெரியவந்துள்ளது. 500 சிசி திறன் கொண்ட பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வருவது உறுதியாகியுள்ளது.

புதியதாக தயாரிக்க உள்ள இருசக்கர வாகனம் என்ன வகையிலான சிறப்பு அம்சங்களை கொண்டு உள்ளது என்ற தகவல் தெரியவில்லை. மேலும், 2022ம் ஆண்டிற்கு பின்னரே இது விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன. புதிய பைக்கின் விலை மற்றும் அனைத்து தகவல்களும் அடுத்த ஆண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

புதிய முட்டையா ? பழைய முட்டையா ? தெரிந்து கொள்வது எப்படி ?

முட்டை ஒரு புரோட்டின் நிறைந்த உணவு. இதை தினமும்  உணவில் சேர்ப்பது நல்லது. இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை சாப்பிடுகிறார்கள். அந்த முட்டை நல்ல முட்டையா?அல்லது கெட்டுப்போன  முட்டையா? என்று பார்க்கலாம்.

முன்பெல்லாம் முட்டையை காதுக்கிட்ட குலுக்கும்போது சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று சொல்வார்கள், அல்லது உடைத்து பார்க்கும்போது மஞ்சள் கரு சிதறிய நிலையிலோ, கலங்கிய நிலையிலோ இருந்தால் அது கெட்டுப்போன முட்டை என்பார்கள்.

இப்பொழுது  நீங்க ஒரு டம்பளரில் தண்ணீர் நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போடவும், முட்டை முழுவதுமாக மூழ்கி டம்பளரில் அடிப்பகுதியில் தங்கினால் அது புதிய முட்டை.

டம்ளருக்குள் ஒரு பக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் ஆகிவிட்டது என்று அர்த்தம்.நன்றாக சாய்ந்தநிலையில் மிதந்துகொண்டிருந்தால் 2 அல்லது 3 வாரம் பழைய முட்டை என்று அர்த்தம்.

ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை பழையது அல்லது கெட்டுப்போனது என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.

நிறைய பேர் முட்டையை பிரிட்ஜியில் வைத்து உபயோகிப்பார்கள்.  அடிக்கடி பிரிட்ஜ் கதவை திறந்து மூடும்போது வெளிப்பகுதியில் உள்ள வெப்பநிலையும் உள்பகுதியில் உள்ள வெப்பநிலையும் எதிர்மறையாக பாதிக்கும்.  அதிக நாட்கள் முட்டையை சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்குள் உபயோகிப்பது நல்லது.

நாளாக நாளாக முட்டைக்குள் இருக்கும் காற்று விரிவடையும்.  முட்டைக்குள் இருக்கும் நீர்பரப்பை காற்று நிரப்பிவிடும்.  அதனால் முட்டை மிதக்க தொடங்கும்.  முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சி அடைய தொடங்கிவிடும். அதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும்.  அதனால் நல்ல முட்டையா  என்று பார்த்து உண்பது நல்லது.

பாலிமர் நியூஸ் லைவ் – Polimer News Live Today Tamil

பாலிமர் நியூஸ் லைவ் – தமிழ்நாட்டின் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்று! பாலிமர் நியூஸ் லைவ் என்றாலே சமீபத்திய செய்திகள், நேரலை ஒளிபரப்பு, மற்றும் துல்லியமான தகவல்கள் நினைவுக்கு வரும். ஏப்ரல் 03, 2025 இன்று, இந்த சேனல் தமிழ் மக்களுக்கு நேரலை செய்திகள் மூலம் உலக நிகழ்வுகளை வீட்டிற்கே கொண்டு வருகிறது. நீங்கள் பாலிமர் டிவி லைவ் பார்க்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு முழு வழிகாட்டியாக இருக்கும்! 😊

இங்கே, பாலிமர் நியூஸ் ஆன்லைன் பார்ப்பது எப்படி, எப்போது ஒளிபரப்பு நடக்கிறது, மற்றும் இதன் சிறப்புகள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். தமிழ்நாடு செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, பாலிமர் செய்திகள் உங்களை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கும்.

பாலிமர் நியூஸ் லைவ் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்!


பாலிமர் நியூஸ் லைவ் என்றால் என்ன?

பாலிமர் நியூஸ் லைவ் என்பது தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு 24/7 செய்தி சேனல். இது தமிழ் செய்தி சேனல்களில் மிகவும் பிரபலமான ஒன்று. அரசியல், விளையாட்டு, சினிமா, மற்றும் வணிகம் என அனைத்து துறைகளிலும் சமீபத்திய செய்திகள் இதில் ஒளிபரப்பாகின்றன. பாலிமர் டிவி நேரலை மூலம், உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறியலாம்.

  • பாலிமர் நியூஸ் லைவ் ஏன் சிறப்பு?
    • வேகமான செய்தி புதுப்பிப்பு
    • துல்லியமான அறிக்கைகள்
    • பார்வையாளர்களுடன் நேரடி தொடர்பு

பாலிமர் நியூஸ் லைவ் பார்ப்பது எப்படி?

பாலிமர் நியூஸ் லைவ் பார்க்க விரும்புகிறீர்களா? இதோ எளிய வழிமுறைகள்:

  1. ஆன்லைனில் பார்க்க: polimernews.com-ல் பாலிமர் நியூஸ் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் கிடைக்கிறது.
  2. மொபைல் ஆப்: பாலிமர் நியூஸ் ஆப்பை பதிவிறக்கி, பாலிமர் டிவி லைவ் அனுபவிக்கவும்.
  3. டிவி சேனல்: உங்கள் கேபிள் அல்லது DTH சேவையில் சேனலைத் தேடுங்கள்.

பாலிமர் செய்தி புதுப்பிப்பு பெற, அவர்களின் யூடியூப் சேனலையும் பின்தொடரலாம்.


பாலிமர் நியூஸ் லைவ் – ஒளிபரப்பு அட்டவணை

பாலிமர் நியூஸ் லைவ் ஒளிபரப்பு நேரங்கள்:

  • காலை செய்திகள்: 6:00 AM – 9:00 AM
  • மதிய செய்திகள்: 12:00 PM – 2:00 PM
  • இரவு நேரலை: 8:00 PM – 10:00 PM

பாலிமர் டிவி நேரலை தினமும் தமிழ்நாடு செய்திகள் மற்றும் சர்வதேச செய்திகளை உள்ளடக்கியது.


பாலிமர் செய்திகளின் சிறப்பு அம்சங்கள்

  • வேகம்: பாலிமர் நியூஸ் லைவ் மற்ற சேனல்களை விட வேகமாக செய்திகளை வழங்குகிறது.
  • வகைகள்: அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் பொழுதுபோக்கு.
  • நம்பகத்தன்மை: பாலிமர் செய்தி புதுப்பிப்பு எப்போதும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது.

தமிழ்நாடு செய்திகளில் பாலிமர் நியூஸ் லைவ்

பாலிமர் நியூஸ் லைவ் தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளூர் செய்திகளை முன்னுரிமையாக வழங்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை என அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நேரலை செய்திகள்!

Image Idea: A Tamil Nadu map highlighting news hotspots with the caption “பாலிமர் நியூஸ் லைவ் – தமிழ்நாடு முழுவதும்!”


பாலிமர் நியூஸ் ஆன்லைன் vs பிற சேனல்கள்

பாலிமர் நியூஸ் ஆன்லைன் vs சன் நியூஸ், தந்தி டிவி:

  • வேகம்: பாலிமர் முன்னிலை.
  • அணுகல்: பாலிமர் டிவி லைவ் எளிதாகக் கிடைக்கிறது.

Conclusion

பாலிமர் நியூஸ் லைவ் உங்கள் செய்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறந்த தேர்வு! பாலிமர் டிவி நேரலை மூலம், உலகத்தை உங்கள் கைகளில் வைத்திருக்கலாம். இப்போதே polimernews.com-ல் பாருங்கள்!