தங்களின் வருமான வரிகளை தாக்கல் செய்ய தற்பொழுது www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இணையதளதை பயன்படுத்தி மின்னணு முறையில் தங்களின் வருமான வரி கணக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வணிகம் சம்மந்தமான வரி கணக்குகளையும் இதில் தாக்கல் செய்துகொள்கின்றனர். இந்த இணையத்தளம் மூலம் வருமான வரித்துறையிடம் தங்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளலாம். பிறகு அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், அபராதம் போன்ற மேல்முறையீடு செய்திட இந்த இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வருமான வரித்துறையினர் தற்சமயம் ஒரு புதிய இணையதளத்தை தொடங்கவுள்ளனர். இந்த www.incometaxgov.in என்ற இணையதளமானது ஜூன் 7ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் . இதை எளிமையான முறையில் பயன் படுத்தலாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தற்பொழுது செயல்பட்டுவரும் இணையதளம் ஜூன் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் புதிய இணையதளத்தை செயல்படுத்தும் பணிக்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. ஜூன் 1 முதல் 6 ஆம் தேதி வரை இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
புதிய இணையதளத்தில் வரி செலுத்த கால இடைவெளி அளிக்கும் வகையில், அதிகாரிகள் தங்களது விசாரணை போன்ற பணிகளை ஜூன் 10ஆம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.