நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு எளிமையான முறையில் சேவைகளை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் Gas சிலிண்டர் புக் செய்தவற்கான புதிய வழி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Gas சிலிண்டர் புக் செய்வதற்கு கொடுக்கப்பட்ட எண்ணிற்கு போன் செய்து உங்களுக்கான மொழியை தேர்வு செய்து, புக் செய்வதற்கான எண்ணைஅழுத்த வேண்டும். அதன்பிறகு புக் செய்ததற்கான குறுஞ் செய்தி உங்கள் தொலைபேசிக்கு வரும். ஆனால் இப்போது சிலிண்டர் புக் செய்வதற்கு கொடுக்கப்பட்ட எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இந்த சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் ஒடிசா , கோட்டா பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.