நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்

2 Min Read

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா தொற்றை தடுக்க மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு மே 6 ஆம் தேதி காலை 4.00 மணி முதல் மே 20 ஆம் தேதி 4.00 மணி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

புதிய கொரோனா கட்டுப்பாடுகள்

  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்களில் பயணிகள் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மளிகை கடை, பழக்கடை மற்றும் காய்கறி கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி இல்லை.
  • ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 3000 சதுர அடிக்கு அதிகமான பெரிய கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகை கடை, பழக்கடை மற்றும் காய்கறி கடைகள் குளிர் சாதன வசதிகள் இன்றி பகல் 12.00 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செய்யப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் செய்யப்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை செய்யப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மருத்துவமனைகள், மெடிக்கல் ஷாப், பால் கடைகள் வழக்கம் போல் எந்த விதமான இடையூறும் இன்றி செயல்படும்.
  • அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகள் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செய்யப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
  • சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுள்ளது. திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 25 நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் சடங்குகளில் கலந்து கொள்ள 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
  • அனைத்து பகுதிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன் கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
Share This Article
Exit mobile version