நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் – ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Pradeepa 3 Views
1 Min Read

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டிவீட்டர் பக்கத்தில் நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் இந்த தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக அதற்க்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 12 ஆம் தேதி MBBS மற்றும் BDS தேர்வுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்யும் குழுவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர் சட்ட போராட்டம் நடத்தி தான் நீட் விலக்கு பெற முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். நீட் தேர்வின் போது கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்க்கான வழிகாட்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்று ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு நடைபெறும் மையங்களும் கடந்த ஆண்டு எண்ணிக்கையான 3 ஆயிரத்து 862 இருந்து அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

தேர்வு மையத்தில் அனைத்து மாணவர்களுக்கும் முக கவசம் வழங்கப்படும் என்றும் முறையாக கிருமி நாசுனி தெளித்தல், சரியான இடைவெளியில் இருக்கைகள் அமைத்தல், ஆய்வு தொடர்பு அற்ற முன்பதிவு ஆகியவை உறுதி செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்அறிவித்துள்ளார்.

Share This Article
Exit mobile version