- விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டியுள்ளது.
- இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித்தொடரில் பங்கேற்று ,டெஸ்ட் ,ஒரு நாள் ,டி20 போட்டிகளில் அறிமுகமானவர்.
- விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், தினேஷ் கார்த்திக் தலைமையில் இடம்பிடித்துள்ளார். பிப்ரவரி 20 முதல் மார்ச் 14 வரை, விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. டி 20 தொடரிகளில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொள்ள இருப்பதால் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டியில் தமிழக அணி சார்பாக நடராஜன் விளையாடினால் அவர் சோர்வடைய கூடும் மற்றும் அவருக்கு காயங்கள் ஏதாவது ஏற்படகூடும். மேலும் அவர் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணியில் இருந்து நடராஜனை விடுவிக்க கோரி பிசிசிஐ அறிக்கைவிட்டது. இதை தொடர்ந்து விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். இப்பொழுது அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமிக்குச் சென்று பயிற்சி எடுத்து கொண்டுயிருக்கிறார்.
- மேலும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டி,வருகிற மார்ச் 8 அன்று முடிவடைகிறது . 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பெங்களூரில் உள்ள ஆமதாபத்தில் மார்ச் 12 முதல் 20 வரை நடைபெறயுள்ளது. ஒரு நாள் போட்டி புணே நகரில் மார்ச் 23 முதல் 28 வரை நடைபெறயுள்ளது.