தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம் – அரசாணை வெளியீடு.!

Selvasanshi 4 Views
1 Min Read

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதனை அடுத்து, தமிழக அரசு சில அரசு துறைகளின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது மாற்றி அமைக்கப்பட்ட பெயர்களை தமிழக அரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, இது தொடர்பான அரசாணையை தலைமை செயலாளர் வெ.இறையன்பு தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை என்ற பெயரை மனிதவள மேலாண்மை துறை என்று மாற்றப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை என்ற பெயரை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என்ற பெயரை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்ற பெயரை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை என்ற பெயரை சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள பெயர் மாற்ற அரசாணையை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார்.

Share This Article
Exit mobile version