முகத்தில் மங்கு நீங்க

sowmiya p 32 Views
2 Min Read

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகத்தில் மங்கு என்று சொல்லப்படக் கூடிய ஆங்காங்கே கருப்பு திட்டுக்கள் போல் காணப்படும்.

  • மங்கு முக அழகையே கெடுக்கும். இப்பொழுது வாரம் மூன்று முறை இதை தடவினால் போதும் முகத்தில் உள்ள மங்கு நீங்கிவிடும். அதற்கான வழிமுறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு-1

2. காய்ச்சாத பால்

3. அரிசி மாவு

4. கற்றாழை ஜெல்.

இதை இப்பொழுது மூன்று முறையாக முகத்தில் தடவ வேண்டும்.

முறை 1:

1. உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.

2. பின் மேலே உள்ள தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஒரு மிக்ஸி ஜாரில் இந்த துண்டுகளை போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

4. வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

5. இப்பொழுது ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.

6. இரண்டு ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால் 2 ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

7. இதை முகத்தில் தடவி 5 நிமிடம் காய்ந்த பின் முகத்தை கழுவிக் கொள்ளவும்.

8. முகத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

முறை 2:

1. இப்பொழுது ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.

2. இரண்டு ஸ்பூன் அளவுக்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும்.

3. அதை கலப்பதற்கு ஏற்றவாறு உருளைக்கிழங்கு சாற்றை ஊற்றி நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

4. இதை முகத்தில் தடவி நன்கு தேய்த்து விட்ட பின் 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.

5. இதை தேய்க்கும் பொழுது உங்களது முகம் நிறம் மாற ஆரம்பிக்கும்.

முறை 3:

1. இப்பொழுது ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.

2. அது ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்து கொள்ளவும்.

3. ஒரு ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாற்றை ஊற்றிக் கொள்ளவும்.

4. நன்கு கலந்த பின் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் காய்ந்த பின் முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இதனை வாரத்தில் மூன்று முறை செய்து வரும் பொழுது உங்களது மங்கு விரைவில் மறைந்து விடும்.

TAGGED:
Share This Article
Exit mobile version