கடந்த பனிரெண்டு நாட்களாக மாற்றம் இல்லை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

Selvasanshi 3 Views
1 Min Read

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டன.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணிக்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு மாததிற்கு  இரு முறை பெட்ரோல் மற்றும்  டீசல் விலை நிர்ணயம் செய்யப்ப்பட்டது. இந்த விலை நிர்ணயம் முறை சுமார் 15 வருடமாக அமலில் இருந்தது.

மத்திய அரசு சர்வதேச எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை  ஒப்படைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

இதில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி  இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிகபடியான ஏற்றம் உண்டாகுவதை  காண முடிந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல்  இருந்தது.

ஆனால் அந்த ஆண்டு  ஜூன், ஜூலை மாதங்களிலே பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர ஆரம்பித்தது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11 -க்கு விற்கப்படுகிறது .

இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து மாற்றமில்லாமல்.  ஒரு லிட்டர் டீசல்  ரூ.86.45 -க்கு  விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணிக்கு அமலுக்கு வந்துள்ளது.

கடந்த சில மாதமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில், பனிரெண்டு நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Exit mobile version