மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை

Vijaykumar 1 View
1 Min Read

பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு 33% கடந்த டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை அதிகரித்துள்ளது.தற்போது 85% மஹாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அதிகரிப்பு காரணமாக இன்று முதல் 21ம் தேதி வரை,நாக்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் ,சமுக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

இதில் தடுப்பூசி செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Exit mobile version