தமிழகத்தில் மினி ஊரடங்குதான் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Selvasanshi 4 Views
1 Min Read

தமிழகத்தில் கடந்த ஒரு வரமாக பள்ளி மற்றும் கல்லூரி, நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

ஆனால் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முழு ஊரடங்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட தெரு மற்றும் வீடு போன்ற பகுதிகளில் மட்டும் ஊரடங்கு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் 1000-ஐ கடக்கிறது. இதனால் தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்தவகையில் கடந்த வாரம் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது .

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கிறது. இதை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Share This Article
Exit mobile version