வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சுவையான, மலிவான பப்பாளி பழம் தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இந்த பழத்தில் விஷக்கிருமிகளை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ உயிர் சத்து இதில் நிறைய இருக்கிறது.
பப்பாளி பழத்தில் மட்டுமின்றி, இவற்றின் காய், இலை, விதை ஆகியவற்றிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்து இருக்கிறது. நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்க கூடிய பப்பாளியின் மருத்துவ பயன்களை பற்றிப் பார்ப்போம்.
பப்பாளிப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். பப்பாளிக் காயில் வரும் பால் வாய்ப்புண்யை குணப்படுத்தும்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சி துரிதமாக்கும் பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.மேலும் இது எலும்பு வளர்ச்சி மற்றும் பல்லை உறுதியாக்கும். பப்பாளி காயை அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை குறையும். பிரசவித்த பெண்கள் உணவில் பப்பாளிக் காய் குழம்பை சேர்த்து கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளி விதை பொடியை பாலில் சேர்த்து உண்டால் நாக்குப்பூச்சிகள் அழிந்துவிடும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, பிறகு சுடுதண்ணீரால் கழுவினால் முகச்சுருக்கம் மாறி, முகம் பொழிவாக காணப்படும். சேற்றுப் புண்கள் குணமாக பசும்பாலுடன் பப்பாளிப் பாலை சேர்த்து புண்கள் மீது தடவும்.
குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களை குணப்படுத்த, புண்களின் மீது பப்பாளிப் பாலை தடவும். உடலில் ஏற்படும் கட்டியின் மீது பப்பாளி இலையை அரைத்து பற்றுப் போட்டால் கட்டி உடையும்.
வீக்கம் உள்ள இடத்தில் பப்பாளி இலை சாறையை தடவினால் வீக்கம் குறையும். தேள் கடியின் வலியையும், விஷத்தயையும் குறைக்க, பப்பாளி விதையை அரைத்து தேள் கடித்த இடத்தில் போடவும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு பிளேலெட் செல்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்தப்போக்கு ஏற்படும். இவர்களுக்கு பப்பாளி இலைச்சாறு கொடுத்து சிகிச்சையை மேற்கொள்ளப் படுகிறது. பிளேலெட்டுகளை அதிகரிப்பதில், பப்பாளிச்சாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.