கடுகு எண்ணெயின் மருத்துவ பயன்கள்

Ishwarya 4 Views
2 Min Read

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி கடுகு இல்லாத தென்னிந்திய சமையலை பார்க்க முடியாது. தலைமுறையினர் சாப்பாட்டில் கடுகு இருந்தாலே தள்ளி வைத்து விடுகின்றன. அதனால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது எனவே உணவுடன் எடுத்துக் கொள்ள இயலாதவர்களுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் கடுகின் பயன்களை முழுவதும் பெற இயலுகிறது.

கடுகில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கடுகில் மாங்கனீசு கால்சியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், தாதுஉப்பு வைட்டமின்கள், ஆக்சிடென்ட்கள், சல்பர், அப்லோ டாக்சின், சினி கிரீன், மைக்ரோசின், எருசிக், ஈக்கோ செனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற சத்துக்கள் உள்ளன .

கடுகியின் மருத்துவ பயன்கள்

இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெய் பரவலாக பயன்படுத்தி வருகின்றன.

1. கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோஷம் குணப்படுத்தவும் முடி வளர்ச்சி அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சருமத்தின் ஊட்டமளிக்கும் எலும்புகளை வலுப்படுத்தும் வாய்வழி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் மற்றும் இன்னும் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.

2. சமையலைத் தவிர கடுகு எண்ணெய் ஆனது காய்கறி சாலட்கள், குழந்தைகள் மசாஜ் எண்ணெயாகவும், தலையில் தடவும் எண்ணெயாகவும் மற்றும் உடலில் தடவும் எண்ணெயாகவும் பயன்படுத்தி வருகின்றன.

3. கடுகு எண்ணெய் சருமத்திற்கு இயற்கையான ஸ்கிரீனாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது சருமத்தின் நிறத்தை கூட்டுவதோடு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும்.

4. கடுகு எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் சமஅளவு கலந்து உடல் மற்றும் முகத்தில் தடவி விட்டு நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

5. தினமும் காலையில் குளிக்க செல்வதற்கு முன் 10 நிமிடம் இரவு தூங்குவதற்கு முன் உதட்டில் கடுகு எண்ணை தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறுவதோடு மென்மையாக மாறிவிடும்.

6. கடுகு எண்ணெய் சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வர தலைமுடி அடர்த்தியாக வளரும் தலைமுறைகள் சருமத்திற்கு மட்டுமல்ல பற்களும் பளிச்சென்று சுத்தம் செய்து வைக்கவும் கடுகு முன் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன.

7. பல் துலக்குவதற்கு முன் கொஞ்சம் கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளிப்பதால் பற்களில் உண்டாகும் நோய் தொற்றுக்கள் உண்டாகும் வீக்கம் ரத்த கசிவு போன்றவற்றை சரியாகும்.

8. சர்மத்தை இயற்கையான முறை சுத்தம் செய்ய ஒரு கிளன்சராக கடுகு எண்ணை பயன்படுத்துகின்றது. கடுகு  எண்ணெயை தூங்கும் போது தலையில் தேய்த்து வரவேண்டும்.

கடுகு எண்ணெய் ஆனது தலை முடி வேர்களில் சென்று முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

கடுகு எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை ஏற்படும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.

9. பற்களை பளிச்சென்று மின்னும் பற்களில் உள்ள கறைகள் நீக்கும் பல் தேய்த்து முடித்தவுடன் சிறிது கடுகு எண்ணெய் 4 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து வாயில் ஊற்றி 2 நிமிடம் வரை வைத்து இருந்தால் வாய் கொப்பளிக்கவும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பல் மற்றும் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

Share This Article
Exit mobile version