வீட்டில் உள்ள பொருட்களின் மருத்துவ குணங்கள்

Pradeepa 2 Views
1 Min Read

1.  அகத்தி கீரையை 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு  முறை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு நோய் குணமாகும்.

2.  அருகம்புல் ஜூஸ் வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகுவதோடு  உடல் உஷ்ணமும் தணியும்.

3.  செம்பருத்திப்பூவை காயவைத்து பொடியாக்கி சீயக்காய் போல் தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலை முடி கொட்டுவது நின்றுவிட்டு  நன்றாக வளர ஆரம்பிக்கும்.  கண்களுக்கு குளிர்ச்சியும் தரும்.

4.  வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் உடல் வெளுப்பு மற்றும் தேம்மல் குணமாகும்.

5.  குப்பைமேனிசாற்றை பிழிந்து  இரும்பாலும் சளியும் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி பிரச்சனை  தீர்ந்துவிடும்.  அதிகமாக  கொடுத்தால் வயிற்றுப்போக்கு   உண்டாகும்.

6.  நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும். முகப்பொலிவு  ஏற்படும்.

7.  வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தினமும் ஒரு தேக்கரண்டி சுடு தண்ணீரில் கலந்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

8.  சோற்றுக்  கற்றாழையின் ஒரு பகுதியில் உள்ள வெள்ளை நிற ஜெல்லியை மோர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சனை தீரும்.  மேலும் உடல் இளமை தன்மை அதிகமாகும்.

9.  இரவில் தூக்கம் வராமல்   தவிப்பவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்தி பின் படுக்கைக்கு செல்லவும்.  சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெல்லம் அல்லது கருப்பட்டி சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

10.  மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு   எந்த மருந்தும் வேலை செய்யாது.அது மருந்தின் செயல்பாட்டு விரீயத்தை குறைக்கும்.

Share This Article
Exit mobile version