76 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

1 Min Read
  • தலைநகர் டெல்லியில் அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் அதிகபட்சமாக 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
  • இது வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 76 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.
  • ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி, ஹரியானா, சண்டிகர், சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
  • அந்த வகையில் டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது.
  • 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு தற்போது மார்ச் மாதத்தில் டெல்லியில் 104.18 டிகிரி வெயில் பதிவானது இதுவே முதல்முறை என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல வானிலை மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.
  • கடந்த மாதம் இந்திய வானிலை மையம், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவித்து இருந்தது.
  • ஏப்ரல், மே மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.
  • இதற்கு முன் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நேரங்களில் வெயிலின் தாக்கம் இதமாக இருக்கும். மேலும் மிதமாக தென்றல் காற்றும் வீசும்.
  • ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை நாளில் வெயில் அக்னியாய் சுட்டெரித்தது. ஒரு சில பகுதிகளில் அனல் காற்றும் வீசத் தொடங்கியது .
  • டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
Share This Article
Exit mobile version