Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

மிகச் சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம் என்கிறோம். இந்த ஓமத்தில் உள்ள தைமோல் என்னும் உட்பொருள், ஓமத்திற்கு தனித்துவமான சுவையும், மணத்தையும் கொடுக்கிறது.

ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த ஓமம் சமையலுக்கு மட்டுமில்லாமல், சில இயற்கை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓம தண்ணீரை எந்தெந்த பிரச்னைகளுக்கு குடிக்கலாம். அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓம தண்ணீர் வாய்வுத் தொல்லைக்கு நல்ல நிவாரணம் தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

ஓம தண்ணீர் இருமல், சளி, வாய், காது ஆகியவற்றினால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் கண் நோய் தொற்றுக்கும் ஓமம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நுரையீரலை சுத்தப்படுத்தவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்சனைக்கு ஓம தண்ணீர் நல்ல நிவாரணியாக இருக்கிறது.

வயிறு வலி, இரப்பைக் குடல் பிரச்சனைகளுக்கும் ஓமம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஒம வாட்டர் குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

முடக்கு வாதம், அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கும் ஓமம் உதவுகிறது.

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓமம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதோடு இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் உதவுகிறது.

ஓம தண்ணீரை மருந்து கடைகளில் வாங்கி குடிப்பதை விட, நீங்கள் வீட்டிலேயே செய்து பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

ஓம தண்ணீர் செய்வது எப்படி?

இரண்டு டீஸ்பூன் ஓமத்தை எடுத்து லேசாக வறுத்து, பின் ஒரு கப் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் தண்ணீரில் ஓமத்தை நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அல்லது ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

Share: