- தேர்வு பற்றி அச்சம் நம்மில் தொற்றிக் கொண்ட உடனே, நம் நடவடிக்கைகளில் பல்வேறுமாறுதல் நிகழ்வதை நாம் பார்க்கலாம். அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பழக்க வழக்கம்.
- தேர்வு நேரங்களில் உணவுப் பழக்கத்தில் பல்வேறு மாற்றங்களையும் சில கட்டுப்பாடுகளையும் கையாள்வது கட்டாயமாகிறது. சில மாணவர்கள் தேர்வுநேரங்களில் சாப்பிடாமல் படித்துக்கொண்டே இருப்பார்கள்.
- பெற்றோர்களும் அதை பெரிதாக பொருட்படுத்துதாமல் விட்டுவிடுகின்றனர். தேர்வு நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுகள் பெரிதும் துணை புரிகின்றன.
- நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுககளை உண்பதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நல்ல நினைவாற்றலை தந்து, நினைத்த மதிப்பெண்களை பெற வழிவகை செய்கிறது.
- மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதற்காக காலை உணவை எடுத்துக்கொள்ளாமல், நேரடியாக தேர்வுகளை சமாளிக்க சென்று விடுவார்கள்.ஆனால் தேர்வு எழுதும்போது மூளையானது சோர்வடைந்து எழுத்தமுடியாமல் போய்விடும். எனவே மாணவர்கள் தேர்வுக்கு முன்னும் பின்னும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மாணவர்கள் நீர் ஆதாரங்களை எடுத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது. தேர்வின் பொது தண்ணீரை எடுத்துக்கொண்டு போவது, படிக்கும்போதும் நீரை அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது. ஜூஸ் அதாவது எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற பானங்களை பருகுவது மிகவும் நல்லது.
- காய்கறிகள்,கீரைவகைகள்,பழங்களை உட்கொள்ளுவது ஆரோகியமானது. தானியங்களை நம் காலை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் இடைவெளி விட்டு படிப்பதும், சரியான நேரத்தில் தூங்குவதும் நல்லது.
நினைவாற்றலை மேம்படுத்தும் சில உணவு பொருட்கள்:
நெய்:
நெய் ஞாயாபகசக்தியை அதிகரிக்கக்கூடியது.காலை,மலை மற்றும் இரவு என அனைத்து வேலைகளிலும் நெய் சேர்த்துக்கொள்ளுவது மாணவர்களுக்கு நல்லது. ஒமேகா 3-ன் முக்கிய சாதியாக திகழும் நெய்யை தாராளமாக பயன்படுத்தலாம்.
தயிர்:
மாணவர்கள் தேர்வின் போது மனஅழுத்தத்தை தடுக்கவும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்கவும் தயிர் பயன்படுகிறது. தயிரில் சிறிதளவு சக்கரையை கலந்து உட்கொள்ளவது மிகவும் நல்லது.
சர்க்கரை:
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவும் போது இனிப்பு வகைகளை உணவில் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரையானது மாணவர்களின் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும்,மூளையை சோர்வடையாமல் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.நீண்ட நேரம் மாணவர்கள் மன திறனுடன் படிப்பதற்கான சக்தியை தருகிறது.