தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு!

Selvasanshi 1 View
2 Min Read

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் அமுலுக்கு வந்தது.
  • ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சலுக்கு மட்டும் அனுமதி.
  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் அமுல்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசு இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்:

  • ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், நற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சலுக்கு மட்டுமே ஓட்டல்கள் இயங்கும் என்று அரசு கூறியுள்ளது.
  • தேநீர்க் கடைகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
  • இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும்.
  • வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
  • பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் மூடப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
  • ஆட்டோக்களில் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
  • கார்களில் மூன்று பேர் மட்டும் பயணம் செய்ய வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தினசரி தொழிலாளர்கள் கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா ஊரடங்கால் தினசரி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தார்கள். தற்போது தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால் தினசரி தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார்கள்.

வட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்தி வருகிறோம். தற்போது திடீரென ஊரடங்கு பிறப்பித்திருப்பதால் நாங்கள் என்ன செய்வோம் என்றும் தினசரி தொழிலாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. தற்போது கட்டுப்பாடுகளுடன் தொழில் செய்ய அனுமதி வழங்கவேண்டும் என்று தினசரி தொழிலாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Share This Article
Exit mobile version