நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய அரசு

2 Min Read

ஹைலைட்ஸ் :

  • இந்தியாவில் கொரோனா நோய் தொற்று தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
  • கொரோனா நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம்.
  • தமிழகத்தில் கோவை, சென்னை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டு வருவதால் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அடுத்த சில வாரங்களுக்கு அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பீதியில் உறைந்துள்ளார்கள். அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகமும், உயர்மட்ட அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை செய்தார்கள். இந்த ஆலோசனைக்கு பிறகு 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்த போவதாக முடிவு செய்து இருக்கிறோம் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தமிழகத்தில் கோவை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது. இதனால், இந்தப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அரசு தெரிவித்து இருக்கிறது.

Share This Article
Exit mobile version