Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த முழுமுடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது தொடர்ந்து அமல்படுத்தலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது.

இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

1. இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதி.

2. நாளை அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.

3. சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி.

4. காலை 6மணி முதல் 10மணி வரை, நற்பகல் 12மணி முதல் 3மணி வரை ,மாலை 6மணி முதல் 9மணி வரை உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி.

5. பார்சல் சேவை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் ஸ்விக்கி, ஜொமோட்டோ மூலம் உணவு டெலிவரிக்கு அனுமதி.

6. முழு ஊரடங்கு காலத்தில் நாட்டு மருந்து கடைகள், மருந்தகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7. பால் மற்றும் குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி.

8. காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வழங்கப்படும்.

9. உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்காக மட்டும் மாவட்டத்திலிருந்து மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி.

10. பெட்ரோல் டீசல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும்.

11. மின்னணு சேவை 8 மணி முதல் மலை 6 மணி வரை செயல்பட அனுமதி.

12. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.

13. இன்றும் நாளையும் மால்கள் திறக்க அனுமதியில்லை.

14. சென்னையில் இன்றும் நாளையும் அரசு சார்பில் 1500 பேருந்துகள் இயக்கப்படும். இதேப்போல் திருச்சி, கோவை , மதுரை, சேலம் மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3000 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் அத்தியவசிய தேவையின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினால் சுத்தம் செய்வது ஆகியவற்றை
கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பொதுமக்களுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். தமிழக அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share: