வாழ்க்கை பற்றிய கவிதைகள் – life quotes in tamil

Pradeepa 99 Views
15 Min Read

வாழ்க்கை கவிதைகள் தமிழ்

அழுகின்ற வினாடியும்
சிரிக்கின்ற நிமிடங்களும்
வாழ்க்கை சக்கரத்தில்
நிரந்தரமில்லை

முழுமையாக தெரிந்து
கொள்ளாமல் எதையும்
மதிப்பிடாதே

தீர்க்க முடியாத துன்பம்
எதுவும் இல்லை துன்பத்துக்கு
சரியான தீர்வை கண்டு
பிடிக்காதவர்கள் தான் அதிகம்

அணை உடைத்த நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்

வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஆயிரம் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்க முடியாத
வாழ்க்கைப் பாடத்தை
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள்
எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்

இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு

நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது

போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்

யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது
இருளில் தான்

வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும்
இருப்பது கரை என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை

தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய உபதேசமும்
தேவையில்லை

தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவும் இல்லை

அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்

வாழ்க்கை வாழ்வதில் இல்லை,
நம் விருப்பத்தில் இருக்கிறது

வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்
தோல்வி கண்டவர்கள் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்
இதுதான் வாழ்க்கை

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

நம்மை நாம் கேள்வி கேட்காதவரை
நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை

நிறைய பேர் செல்வதால்,
அது நல்வழி என்று பொருளல்ல.

ஒருவனின் தெளிவான குறிக்கோளே
வெற்றியின் முதல் ஆரம்பம்

நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்

நமக்கு தெரிந்தது மிகவும்
குறைவு என்பதை புரிந்து
கொள்ள பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்

விரும்பியதைப்
பெற காசிருந்தால்
மட்டும் போதாது
பொறுமையும் வேண்டும்

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை
செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது
என்றே பயப்படுகிறார்கள்

புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் பரவாயில்லை
எதையும் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

சூழ்நிலை எதுவாயினும்
உன்னை நம்பி வந்தவரை
ஒரு நாளும் ஏமாற்றாதே

விருப்பம் இருந்தால்
ஆயிரம் வழிகள்
விருப்பம் இல்லாவிட்டால்
ஆயிரம் காரணங்கள்
இவை தான்
மனிதனின் எண்ணங்கள்

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை
என்றும் கைவிடாதே

உன்னை மதிக்காத
இடத்தில்
பிணமாக கூட
இருக்காதே

வாழ்க்கையில் வெற்றி
அடைய முக்கியமான
மந்திரம் உனது
ரகசியங்களை
யாரிடமும் பகிராதே

நமக்கு பிடித்ததை தான்
நாம் செய்ய வேண்டுமே தவிர
அது மற்றவர்களுக்கு பிடிக்குமா
என்று யோசிக்க கூடாது

உண்மையும் நேர்மையும்
பயம் கொள்ளாது
மாறாக மரியாதை
தந்து பழகும்

பிடித்ததைப் பறித்துப்
பிடிக்காததை கொடுத்து
சந்தோஷமாக வாழ்
என்று சொல்லி சிரிக்கிறது
வாழ்க்கை

வாழ்க்கையில்
பல வலிகளும் உண்டு
பல வழிகளும் உண்டு
வலியை மறந்து
புது வழியை கண்டுபிடியுங்கள்
வாழ்க்கை சுகமாகும்

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன்நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்

தேவை இல்லாமல் பேசுவதை விட
மெளனமாக இருப்பதே சிறந்தது
நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு
நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது

எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்கக் கிடைக்கிறது
ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது.

வலிகளை மறக்க வழி கிடைத்தால்
விழி திறந்து அந்த வழியில் செல்
வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது

சிரிக்கும் போது
வாழ்கையை வாழ
முடியும் ஆனால்
அழும் போது மட்டுமே
வாழ்கையை புரிந்து
கொள்ள முடியும்

குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை
குறை சொல்ல ஊரே உள்ளது

நம் பயம்
எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை

எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாக மாறும்

வாழ்க்கையில் வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும் வரலாறு உண்டு
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு
ஒரு வரி கூட கிடையாது
எனவே, பேசுவதை விட செயலில் காட்டுங்கள்

அதிக வலிகளை கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருக்கும்

உழைத்த காசிற்க்கு
மட்டும் கையேந்து
மற்ற எதற்கும்
எவரிடமும் கையேந்தாதே

கற்பனை என்ற
போர்வையில்
ஒளிந்திருக்கின்றன
நம் நிறைவேறா
ஆசைகள்

வலிமை உள்ளபோதே
சேமிக்க பழகு
கடைசியில் யாரும்
கொடுத்து உதவமாட்டார்கள்

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்,
துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்

என்ன நடந்தது
என்பதை விட
அதை நாம்
எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்
என்பதே வாழ்க்கை

தூய எண்ணம்
கொண்டிருங்கள்
ஏனெனில் எண்ணத்தின்
பிரதிபலிப்பே வாழ்க்கை

அலட்சியம் என்பது எவ்வளவு பெரிய தவறு
என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை

உன்னைத் தாழ்த்துபவர்
முன் உயர்ந்து நில்
உன்னை வாழ்த்துபவர்
முன் பணிந்து நில்

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்

வலி தாங்கும்
மனமிருந்தாலே போதும்
வாழ்க்கை முழுவதும்
சிரித்து மகிழலாம்

வாழ்வின் அர்த்தமும்
நோக்கமும் மகிழ்ச்சி
ஒன்றுதான்

அதிக வலிகளை
கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல
வழிகாட்டியாக இருக்கும்

தனக்கு வலிக்கும்
வரை மற்றவர்களின்
வலி என்பது நமக்கு
ஒரு தகவலே

வாழ்க்கையை
வாழும் போதே
இரசித்து வாழுங்கள்

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை

அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..

சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு
அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது

அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது

அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!
அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே
இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்

இரு பக்கமும் கூர்மையான கத்தியை
கவனமாக பிடிக்க வேண்டும்..
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு
கவனமாக பழக வேண்டும்..!

கடலில் கல் எறிந்தால்,
கடலுக்கு வலிப்பதில்லை மாறாக,
கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..

வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது

நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம்.

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

வாழ்க்கை என்பது
உனக்காக இடத்தை தேடுவது அல்ல
உனக்கான உலகத்தை உருவாக்குவது

மனமும் கண்ணாடியை போல்தான்
உடையும் வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை

யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள்
அதிகரிக்கபோவதில்லை

பயணம் முடிவில்
கிடைக்கும் இருக்கை
போன்றது வாழ்க்கை

கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன

நீங்கள் எதன் மீது அதிக
கவனம் செலுத்துகிறீர்களோ
அது அதிகரிக்கும்
கவலையாக இருந்தாலும்
மகிழ்ச்சியாக இருந்தாலும்

மகிழ்ச்சியான முகம்
தான் எப்போதுமே
அழகான முகம்

எதிர்பார்க்கும் போது
நடக்காததும் எதிர்பார்க்காத
போது பல அதிசயங்கள்
நிகழ்வதுமே வாழ்க்கையின்
சுவாரஸ்யம்

நமக்கு குழி பறிக்க
யாரும் தேவையில்லை
நாம் விட்டுச் செல்லும்
கவனபிழைகள் போதும்

நம்மை பற்றி அடுத்தவர்
அறிந்து கொள்ளாத வரை
நாம் சுவாரஸ்யம் தான்
அறிந்து கொண்டால்
நாம் சாதாரணம் தான்

எல்லாத்தையும் ஏற்றுக்க
பழகிக்கோங்க வாழ்க்கை
எப்போ வேணாலும்
எப்படி வேனும்னாலும் மாறிடும்

உன்னை செதுக்கி கொள்ள
உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும்
சிலரது துரோகங்களும்
போதும்

இன்பமும் துன்பமும்
ஆற்று வெள்ளம்
போன்றது நிலையாக
நிற்காது ஓடி விடும்

வெற்றியை நினைத்து மகிழ்வதை விட
கடந்து வந்த தோல்விகளை
நினைவில் வைத்து செயல்பட்டால்
வாழ்க்கையை என்றும்
மகிழ்ச்சியாக வாழலாம்

ஏமாற்றங்கள் குறைய
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொண்டாலே போதும்

வாழ்வின் சில
தருணங்களையெல்லாம்
மீண்டும் உருவாக்க
முடியாது நடக்கும்போதே
இரசித்துக் கொள்ளுங்கள்

எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே

கலங்கிய நீரில்
தெளிவான பிம்பங்களும்
கலங்கிய மனதில் தெளிவான
சிந்தனைகளும் பிறப்பதில்லை

இழப்பதற்கு எதுவும்
இல்லாதவர்களிடம்
உங்கள் பெருமையை
காட்டாதீர்கள் அவர்கள்
பெருமை கொள்ளும்
அளவிற்கு உதவுங்கள்

நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு
என்பதை புரிந்து கொள்ள
பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்

வாழ்க்கையில் சம்பாதிக்க
வேண்டிய மிகப்பெரிய
விஷயம் பொறுமை

உன்னை நீ புரிந்துகொள்ளவும்
தெளிவு கொள்ளவும் பயணம்
ஒரு அற்புதமான வழி

வயிற்றை எளிதில் நிரப்பிவிடலாம்
ஆனால் கண்ணையும் மனதையும்
திருப்தி செய்வது மிகவும் கடினம்

ஒருத்தருக்காக இன்னொருத்தர
இழக்காதீங்க அந்த ஒருத்தர்
உங்க வாழ்க்கையில நிரந்தரமா
இருப்பாங்கனு யாரும்
உத்திரவாதம் தர முடியாது

ஏமாற்றங்கள் குறைய
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொண்டாலே போதும்

மகிழ்ச்சி என்பது சிரித்துக்
கொண்டு இருப்பது அல்ல
தனிமையில் இருக்கும்
போதும் எந்த வித
கவலையுமின்றி இருப்பது

எதிர்மறை சிந்தனை
உள்ளவனை மருந்தால்
கூட காப்பாற்ற முடியாது

அழகாய் அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை அழகாய்
மாற்றுவதே வாழ்க்கை

பிடித்ததை வைத்துக்
கொள்ளுங்கள்
ஆனால் எதையும்
பிடித்து வைத்து
கொள்ளாதீர்கள்

உன்னிடம் இருக்கும்
அன்பும் நன்றியும்
யாரிடமும் இருப்பதில்லை

தர்மம் ஒரு போதும்
உங்கள் செல்வத்தை
குறைப்பதில்லை

பிடித்தமானவர்களை
புகழாதீர்கள் விரும்புங்கள்

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும்
நிம்மதியும் கிடைக்கும்

வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனால்.. ஒரே நாளில் எதுவுமே மாறாது
மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்

குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்

கற்கையில் கல்வி
கசப்பு கற்றபின்
அதுவே இனிப்பு

மனிதன் தன்னுடைய
தோல்விகளுக்கு வைத்த
மறுபெயர்தான் விதி

உயர்ந்த இடத்தில்
ஆளில்ல உயர்த்தி
விடவும் ஆளில்லை
உன்னை நம்பு உன்
உழைப்பை நம்பு

பயன்படுத்தாத திறமை
அதன் ஆற்றலை
இழந்து கொண்டே இருக்கும்

வாழ்க்கையில் திரும்ப
பெற முடியாதவை
உயிர், நேரம்
பேசிய வார்த்தை

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்,
ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும்

வாழ்க்கையில்
நம்பிக்கை இருக்கணும்
யாரையும் நம்பித்தான்
இருக்கக் கூடாது

நிகழ்காலத்தை நினைத்து
பெறுமையும் கொள்ளாதே
சிறுமையும் கொள்ளாதே

வலிகள் நிறைந்தது தான்
வாழ்க்கை வெற்றியோ
தோல்வியோ நிற்காமல்
சென்று கொண்டே இருங்கள்

இருந்தால் உறவு
பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான்
வாழ்க்கை

அவரவருக்கு
நிகழாத வரை
நிகழ்வது எல்லாம்
வெறும் செய்தி தான்

மதித்தால்
மலராக இரு
மிதித்தால்
முள்ளாக இரு

நாம் உதிர்க்கும்
வார்த்தையில் ஒருவர்
நிம்மதி அடைந்தால்
அதுவும் தர்மமே

பக்குவம் வேண்டும்
என்றால் வாழ்க்கையில்
நொந்து தான் ஆகணும்

அளவான உணவு
உடலுக்கு நலம்
அளவோடு பழகு
உறவுக்கு நலம்

உதவத் தொடங்கு
உதவிகள் தானாய் வரும்

பணமும் மகிழ்ச்சியும்
பரம எதிரிகள்
ஒன்றிருக்கும் இடத்தில்
மற்றொன்று இருப்பதில்லை

நாம் வாழ்வதற்கு பணம்
குறைவாகத்தான் தேவை
ஆனால் அடுத்தவர் போல
வாழத்தான் பணம்
அதிகம் தேவைப்படுகிறது

கலங்கிய நீரும்
குழம்பிய மனமம்
ஒருநாள் தெளியும்
கவலைகளை கடந்து செல்லுங்கள்

ஒவ்வொரு மகிழ்ச்சியும்
வரம் என்பது துன்பங்களை
கடந்தவனுக்கே தெரியும்

கோபப்பட வேண்டிய
இடத்திலும் கதறி அழ
வேண்டிய இடத்திலும்
புன்னகையுடன் கடந்து
செல்வது தான் பக்குவம்

உன் வயதைக் காட்டிலும்
உன் குணம் தான்
மற்றவர்களுக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும்

நீங்கள் பொருளீட்டுவது
நலமாய் வாழ்வதற்கு
மன அழுத்தத்தினால்
உங்களை நீங்களே
அழிப்பதற்கு அல்ல

வாழ்க்கையில்
எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான நேரத்தை ரசிக்க மறக்காதீர்கள்

எதிர்பார்ப்பில்லாமல்
வாழ கற்றுக்கொள்
ஏமாற்றம் இருக்காது

வெறும் கருத்துக்களாலும்
அறிவுரைகளாலும் எவன்
வாழ்க்கையும் மாற
போவது இல்லை

புரிதல் இல்லாத
வாழ்க்கையில் புதையலே
கிடைத்தாலும் பயனில்லை

ஆணவத்தின்
அடையாளம்
ஆடம்பரம்

அன்பை ஆயுதமாக
ஏந்தியவனுக்கு
தோல்விகள் இல்லை

பயத்தை வெல்லாதவன்
வாழ்வின் முதல்
பாடத்தை கல்லாதவன்

காலம் காரணமின்றி
யாரையும் யாரோடும்
சேர்ப்பதில்லை

பிறரைச் சீர்திருத்துவதை விட
தன்னைச் சீர்திருத்துவதே
முதல் கடமை

புரிந்து கொண்டால்
கோவம் கூட அன்பு தான்
புரியாவிட்டால் பாசம்
கூட வேஷம் தான்

செலவழிக்க சில்லறை
கூட இல்லாத போது
தான் தெரியும் வீணாக
நாம் செலவழித்த
பணத்தின் அருமை

ஆசை வளர்ப்பதும்
ஆணவம் பெருகுவதும்
மனிதனது அழிவுக்கே அறிகுறி

உறுதியான மனிதருக்கு
தோல்வி என்று எதுவுமில்லை
போகும் பாதையில் கற்றுக்கொள்ள
பாடங்கள் மட்டுமே உள்ளன

காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை

கொஞ்சம் அனுசரித்து
வாழ்வது நல்ல வாழ்க்கை
எல்லாவற்றையும் அனுசரித்து
வாழ்வது நரக வாழ்க்கை

விதி என்பது உங்களுக்கு
நீங்களே உருவாக்கிக்கொள்வது
உங்கள் விதியை நீங்களே
உருவாக்கத் தவறும்போது
அது தலைவிதியாகிறது

கடவுளிடம் ஏதாவது வரம்
வேண்டும் என்று கேட்டுக்
கொண்டே இருக்கிறோம்
ஆனால் வாழ்க்கை என்பதே
மிகப்பெரிய வரம் தான்

சிலருக்கு வேண்டும் போது
வேம்பும் இனிக்கும்
வேலை முடிந்து விட்டால்
வெல்லமும் கசக்கும்

நரிகளுக்கு மத்தியில் வாழும்
போது சில சமயம் கர்ஜனை
செய்து தான் சிங்கமென
நிரூபிக்க வேண்டியுள்ளது

பிறருக்கு கொடுப்பதற்கு
எதுவும் இல்லை எனில்
கனிவான வார்த்தைகளை
பேசுங்கள் அதுவே
சிறந்த ஆறுதல் தான்

வறுமையை விட
சிறந்த பள்ளிக்கூடம்
வேற எதுவும் கிடையாது

எந்த உறவுமே உங்களை
ஏமாற்றியதில்லை எனில்
நீங்கள் இன்னும் யாரிடமும்
உண்மையாக பழகவில்லை
என்று அர்த்தம்

நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம் நம்மை
தவிர ஏதும் இல்லை
என்று நினைப்பது ஆணவம்

நமக்கு நாமே சுமை
தேவையற்ற சில
நினைவுகளை சுமப்பதால்

தன்னையும் பிறரையும் சரியாக
உணரும் திறன் படைத்தவர்கள்
தான் வாழ்க்கையில் மிகவும்
எளிதாக முன்னேற முடியும்

அடுத்தவர்களுக்கு கெடுதல்
நினைக்காத எல்லா
நேரமும் நல்ல நேரமே

அறிவாளிகளுக்கு அறிவு
அதிகம் ஆனால்
முட்டாள்களுக்கு
அனுபவம் அதிகம்

வானிலையை விட அதிக
வேகமாக மாறுகிறது
மனிதனின் மனநிலை

செய்ய முடியாததை நீங்கள்
செய்யாவிட்டால் பரவாயில்லை
ஆனால் உங்களால் செய்யமுடிந்ததை
நீங்கள் செய்யாவிட்டால் வாழ்க்கை
பரிதாபத்திற்குரியதாய் ஆகிவிடும்

நேற்றைய தோல்விகளுக்கான
காரணங்களை நீங்கள் கண்டறியா
விட்டால் நாளைய வெற்றியை
நோக்கி உங்களால் ஓர் அடி
கூட எடுத்துவைக்க முடியாது

வெற்றிக்காக போராடும் போது
வீண் முயற்சி என்பார்கள்
வெற்றி பெற்ற பின்பு
விடாமுயற்சி என்பார்கள்

வாழ்க்கை ஒரு கேள்வி
யாராலும் பதில் தர முடியாது
மரணம் ஒரு விடை யாராலும்
கேள்வி கேட்க முடியாது

பயன்படாத உண்மையை
விட தேவைக்கு பயன்படும்
பொய்யே கொண்டாடப்படுகிறது

கடந்தவை கசப்பான
நிகழ்வுகளென்றால்
அதை மீண்டும்
ருசிக்க நினைக்காதே

வாழ்க்கையில் கசப்பான
விஷயங்கள் நிகழ்ந்திருந்தால்
நீங்கள் விவேகமானவராக மாற
வேண்டும் காயப்பட்டவராக அல்ல

வாய்ப்புகளை உருவாக்க
தெரியாதவர்களை விட
வாய்ப்புகளை பயன்படுத்தத்
தெரியாதவர்கள் தான் அதிகம்

எதுவுமே செய்யாமல் வீணாகும்
வாழ்க்கையை விட எதையாவது
செய்யும் போது ஏற்படும்
தவறுகள் மிகவும் பயனுள்ளது
கண்ணியமானதும் கூட

சந்தோசம் என்பது மற்றவர்கள்
முன் சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும்
போதும் அழாமல் இருப்பதே

மன அழுத்தம் என்பது ஒரு
குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக ஏற்படுவதில்லை
உங்களை நீங்களே நிர்வகிக்க
முடியாததன் விளைவாக ஏற்படுகிறது

துன்பத்தில் கிடைக்கும்
அனுபவம் துணிச்சல் தரும்

வாழ்வில் அற்புத மாற்றங்களை
கொண்டு வரும் யோசனைகள்
புத்தகங்களிலிருந்து வந்தவையே

சிலருக்கு மாற்றம்
பழகிவிடுகிறது
சிலரை மாற்றம்
பழக்கிவிடுகிறது

பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம் ஆனால்
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்ற முடியாது

அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி

வாழ்க்கை என்பது நீ
சாகும் வரை அல்ல
நீ மற்றவர்கள்
மனதில் வாழும் வரை

கோபத்தில் நாக்கு வேலை
செய்யும் அளவிற்கு மூளை
வேலை செய்வதில்லை

எத்தகைய சூழ்நிலைக்கு
வெளிப்படுத்தப் பட்டாலும்
ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும்
நல்ல நல்ல விஷயங்களை
எடுத்துக் கொள்ளுங்கள்

தவறு செய்ய
வாய்ப்பு கிடைத்தவன்
கெட்டவன் வாய்ப்பு
கிடைக்காதவன் நல்லவன்

ஆனந்தமாகவோ துக்கமாகவோ
இருப்பதை வேறொருவரால்
முடிவுசெய்ய இயன்றால்
அதுவல்லவா இருப்பதிலேயே
மோசமான அடிமைத்தனம்?

நமக்கு புடிச்சவங்க
அழ வைப்பாங்க
நம்மள புடிச்சவங்க
சிரிக்க வைப்பாங்க

நீ எப்படி யோசிக்கிறாயோ
அப்படித் தான் உன்
வாழ்வும் அமையும்

சிலர் பட்டம் போல்
உயரத்தில் பறக்கின்றோம்
என்ற ஆணவத்தில் உள்ளார்
கயிர் போல் சிலர் தாங்கிப்
பிடிப்பதை மறந்து

வாழ்க்கையில் துன்பங்கள்
இலவசம் போன்றவை
தானாகவே நம்மை தேடிவரும்
ஆனால் சந்தோசம் என்பது
நாம் கடுமையாக போராடி
வாங்க வேண்டியது

எது வேணாமோ
எது பிடிக்கலையோ
எதை ஏத்துக்க முடியாதோ
அது தான் வாழ்க்கை
முழுக்க நிறைஞ்சு இருக்கு

கொடுக்கும் கொடையை
விட கொடுப்பவனின்
மனநிலையே அவனை
அடையாளம் காட்டுகிறது

கருவறை இருளுக்கும்
கல்லறை இருளுக்கும்
நடுவில் இருக்கும்
வெளிச்சமே வாழ்க்கை

என்னவெல்லாமோ ஆகனும்னு
ஆசைப்பட்டு கடைசியில்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை

மனித நாக்கு எலும்புகள்
இல்லாததுதான் ஆனாலும்
அது ஒரு இதயத்தையே
உடைக்கும் அளவிற்கு
வலிமை கொண்டது

கருவறை இருளுக்கும்
கல்லறை இருளுக்கும்
நடுவில் இருக்கும்
வெளிச்சமே வாழ்க்கை

எதெல்லாம் வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தோமோ
அதெல்லாம் வேண்டாம்
என்று நம்மையே சொல்ல
வைக்கும் இந்த வாழ்கை

கோபப்படும் இடங்களில்
துரோகம் இருப்பதில்லை
துரோகம் செய்யும் இடத்தில்
கோபம் இருப்பதில்லை

உங்கள் பாதையை நீங்களே
தேர்ந்தெடுங்கள் ஏனெனில்
வேறு எவராலும் உங்கள்
கால்களை கொண்டு
நடக்க முடியாது

ஆசை இல்லா மனம்
வேண்டும் நிம்மதியான
வாழ்க்கை வாழ

சாவு இல்லாத வீடும்
சலனமே இல்லாத
மனமும் இன்னும்
உருவாக்கப்படவே இல்லை

தொலைத்த பழைய
பொக்கிஷங்கள் ஒன்று
கூட திரும்பிக்
கிடைக்கப் போவதில்லை

யாரிடம் சண்டை போட்டுவிட்டு
நம்மால் இயல்பாக இருக்க
முடியவில்லையோ அவர்களை
நாம் நேசிக்கிறோம்
அல்லது வெறுக்கிறோம்

உண்மையான மகிழ்ச்சி
எதிர்காலத்தைப் பற்றிய
கவலையில்லாமல் நிகழ்
காலத்தை அனுபவிப்பதே

யாரும் கூட வரப்போறது
இல்ல யாரும் நமக்காக
நிற்க போறதும் இல்ல
வாழ்க்கைய தனியா
தான் நடந்து கடக்கனும்

உலகம் அதிசயமாகவே
இருந்தாலும் மனம்
விரும்பினால் தான்
ரசிக்க முடியும்

பிடிக்கும் வரை பொக்கிஷம்
வெறுக்கப்பட்டால் வெறும்
குப்பை பொருட்கள்
மட்டுமல்ல உறவுகளும் தான்

துரோகிகள் மீது நம்பிக்கை
வைத்ததற்காக வருத்தப்படாதே
நீ வைத்த நம்பிக்கைதான்
துரோகிகளை உனக்கு
அடையாளம் காட்டியிருக்கிறது

இந்த உலகில் மிகச்
சிறந்த மற்றும் அழகான
விஷயங்களைக் காணவோ
கேட்கவோ முடியாது ஆனால்
இதயத்திலிருந்து உணர முடியும்

வருங்காலத்தைப் பற்றி
கவலைப்படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்லவிதமாக
செயல்பட்டால் உங்கள்
வருங்காலம் தன்னால் மலரும்

விளக்கங்கள் கொடுக்கப்பட்ட
போதிலும் புரிந்துகொள்ளாமல்
ஒதுக்கப்படுவது புத்தகங்கள்
மட்டும் அல்ல மனிதனின்
உணர்வுகளும் தான்

எதிர்பார்ப்புகள் பெரிதாக
இருந்தால் ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்யும்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version