பிரீமியம் குறைவு .. ரூ.3.97 லட்சம் வரை முதிர்வு பணம் புதிய ஆதார் ஸ்டாம்ப் திட்டம் – எல்ஐசி வெளியீடு

Selvasanshi 10 Views
1 Min Read

எல்ஐசி-யின் புதிய ஆதார் ஸ்டாம்ப் திட்டமானது ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்கு மட்டும், ஒரு நோக்கமற்ற லாப எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும்.

இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசிதாரர் குறைந்த பிரீமியத்தை செலுத்தினால் போதுமனது. இந்த பாலிசியில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு நாளைக்கு பிரீமியமாக 30 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

குறைத்த மதிப்பான 30 ரூபாய் செலுத்தும்பட்சத்தில் பாலிசி முடிவடைந்த பிறகு கிட்டதட்ட 4 லட்சம் ரூபாய் வரையில் முதிர்வு தொகை கிடைக்கும்.

அது மட்டும் அல்லாமல் , இந்த சிறிய திட்டம் இறத்தபிறகு சலுகைகள் மற்றும் பிற வசதிகளையும் கொடுக்கிறது. ஆண்கள் மட்டுமே எடுக்க முடியும்

எல் ஐ சியின் இந்த பாலிசி திட்டமானது சேமிப்பு பாதுகாப்பு மற்றும் இரண்டையும் கொடுக்கிறது. எனினும் இந்த திட்டத்தில் உள்ள நெகடிவ் பாயிண்ட் என்னவென்றால் இந்த பாலிசியானது ஆண்களுக்கு மட்டுமே.

இந்த எல் ஐ சி திட்டத்தை வாங்க, ஆதார் அட்டை கட்டாயம் . எல்ஐசி-யின் இந்த அருமையான திட்டத்தில் இறப்பு நன்மைகளும் உண்டு.

நன்மைகள் என்னென்ன ?

அதாவது பாலிசிதாரர்கள் ஒரு சமயம் இறந்துவிட்டால் பாலிசிதாரரின் நாமினுக்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. இதே பாலிசிதாரர் உயிருடன் இருந்தால், அவருக்கு முதிர்வு நன்மைகள் கிடைக்கும்.

இதுவும் ஒரே நேரத்தில் கொடுக்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்திற்கு பிணையமாக வைத்து கடன்னை பெறும் வசதியும் உள்ளது .

Share This Article
Exit mobile version