டிரெண்டிங் ஆகும் தல அஜித்தின் வலிமை திரைப்பட போட்டோ அப்டேட்

Pradeepa 2 Views
1 Min Read

தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் சில அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். ஹச்.வினோத் வலிமை படத்தை இயக்குகிறார்

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்த முதல் படம் ‘நேர் கொண்ட பார்வை’ இதை தொடர்ந்து கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் ‘வலிமை’ ஆகும். “வலிமை ” திரைப்படத்திற்கு இசையமைகின்றார் “யுவன் ஷங்கர் ராஜா”.

தல அஜித்தின் ரசிகர்களை மகிழ்ச்சிக்கும் வகையில் சமீபத்தில் ‘வலிமை’ திரைபடத்தின் அப்டேட்களை ட்விட்டரில் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.மேலும் கபூர் ‘வலிமை’ திரைபடத்தின் ஃபஸ்ட்லுக் மே 1 ஆம் தேதியில் வெளியாகும் என்று கூறினார் மே 1 ஆம் தேதி தல ‘அஜித்’ பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஏற்பாடுகளை செய்வதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

மே 1 ஆம் தேதி ‘வலிமை’ திரைபடத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுருக்கும் போது ‘தல அஜித்’ மிகவும் எளிமையான உடையில் ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். தல அஜித்தின் அந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் மேலும் இதை வலைதளங்களில் ட்ரெண்டிங்க் ஆக்குகின்றனர்.

Share This Article
Exit mobile version