குறில் நெடில் kuril nedil in tamil

sowmiya p 31 Views
1 Min Read

உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்றும் நீண்ட ஓசையுடைய எழுத்துகள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும்.

குறில் – அ, இ, உ, எ, ஒ.

  • “அ, இ, உ, எ, ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்களும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்து என்றழைப்பர்

நெடில் – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

  • “ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள” ஆகிய எழு எழுத்துக்களும் நீண்டு ஒலிப்பதால் இவற்றைக் நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்து என்றழைப்பர்.

மெய் எழுத்துகள்

  • மெய் எழுத்துகள் 18 (‘க்’ முதல் ‘ன்’ முடிய).
  • மெய்யெழுத்துகளில், வன்மையான ஓசை உடையவை வல்லினம் – க், ச், ட், த், ப், ற்.
  • மென்மையான ஓசை உடையவை மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன்.
  • இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை இடையினம். – ய், ர், ல், வ், ழ், ள்.
  • இவற்றை முறையே வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்றும் கூறுவர்.
  • வல்லினம் க ச ட த ப ற என ஆறே (நன்னூல்-68)
  • மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே (நன்னூல்-69)
  • இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே (நன்னூல்-70)

 

Share This Article
Exit mobile version