தமிழ்நாட்டிலேயே இந்ததொகுதியில் தான் அதிக வேட்பு மனு தாக்கல்

Selvasanshi 1 View
1 Min Read

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளார்கள்.

தற்போது தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று கொண்டு வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள்.

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறயுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி,குளித்தலை,கிருஷ்ணராயபுரம் (தனி)ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்து மக்கள் கட்சி ஆகிய பல்வேறு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.

முன்னதாக ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் நேற்று வரை அரவக்குறிச்சி தொகுதியில் 47 வேட்பு மனுக்களும், 46 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். மேலும் குளித்தலை தொகுதியில் 27 வேட்பாளர்கள் 31 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் மட்டும் 32 வேட்பாளர்கள் 36 வேட்பு மனுக்களை அளித்துள்ளனர். கரூர் தொகுதியில் வழக்கத்திற்கு மாறாக 90 வேட்பாளர்கள் 97 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.

கரூர் மாவட்ட தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் விவரங்கள்

தமிழ் நாட்டிலே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Exit mobile version