- Advertisement -
Homeஅறிந்துகொள்வோம்கார்த்திகை தீபம் karthigai deepam wishes in tamil

கார்த்திகை தீபம் karthigai deepam wishes in tamil

- Advertisement -

கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்: வணக்கம் நண்பர்களே எங்கள் பதிவுக்கு வரவேற்கிறோம். நீங்கள் தமிழில் கார்த்திகை தீப வாழ்த்துகளைத் தேடுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம் இங்கே நாங்கள் தமிழில் சமீபத்திய கார்த்திகை தீபம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகை தீபம் திருக்கார்த்திகை என்றும் கார்த்திகை விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழக மக்கள் கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து இந்து வீடுகளிலும் கோவில்களிலும் விடுமுறை கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் பாரம்பரியமாக நவம்பர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் இந்த ஆண்டு டிசம்பர் 6, 2022 அன்று வருகிறது. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக களிமண் எண்ணெய் விளக்குகளை ஏற்றி, பிரார்த்தனை செய்வதன் மூலம் நிகழ்வை நினைவுகூருகிறார்கள்.

Karthigai Deepam Wishes In Tamil:

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கிருத்திகை அன்று வீடுகளில் விளக்குகளால் அலங்கரிப்பது நடை பெற்றுவரும் நடைமுறை. அதுவே கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் . இது சிவபெருமானின் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.ஈசன் ஜோதி வடிவமானவன் என்பதை விளக்கவே இந்த தீப வழிபாடு.

அனைவரின் வாழ்க்கையிலும்
துன்பங்கள் நீங்கி
இம்மண்ணுலகில் புது
இன்பங்கள் துளிரட்டும்!
தீபத்திருநாளை கொண்டாடும்
சொந்தங்கள் அனைவருக்கும்
கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!

அன்பு என்னும் ஒளி ஏற்றி
இணைந்தே கொண்டாடுவோம்!
கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்.

வரிசையாய் தீபம் ஏற்றி
இருளை விலக்கி
அருளை சேர்த்து
இனிமையாய் கொண்டாடுவோம்.
கார்த்திகை தீபத்தை.

இந்த திருநாள் வாழ்வில்
ஈடில்லா மகிழ்ச்சியை அள்ளி தரும்!
இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்!
இல்லங்களில் உள்ள துன்பங்கள் நீங்கி
வாழ்வில் மகிழ்ச்சி சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்!
கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!

துன்பங்கள் எல்லாம் ஓடி போக
ஒளி மயமான எதிர்காலம் அமைய
நினைத்ததை எல்லாம் அடைய
சொந்தங்கள் அனைவருக்கும்
திருகார்த்திகை நல்வாழ்த்துக்கள்!

வெளிச்சம் இருளை போக்குவது போல்
இந்த இனிய திருநாளில்
உங்கள் துன்பங்கள் அகன்று
இன்ப ஒளி வீசட்டும்!

எல்லாரும் நலமுடன் வாழ வேண்டி
ஏற்றும் தீபம் போல்
எல்லோர் வாழ்விலும்
சங்கடங்கள் நீங்கட்டும்!
கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -