தும்மல் பிரச்சனையை போக்கும் கற்பூரவல்லி தேநீர்..!

Selvasanshi 12 Views
1 Min Read

முன்பெல்லாம் தும்மினால் உங்களுக்கு நூறு ஆயுசு என்று சொல்லி மகிழ்ந்த உலகம், இப்போது யாரவது தும்மினால் கொலைக் குற்றவாளியைப் போல் பார்க்கிறது. தும்மல் என்றாலே கொரோனா நோய் தொற்று தான் ஞாபகம் வருகிறது.

கற்பூரவல்லியை ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று கூறலாம். ஏன்னெனில் சளிக்கு இருமலுக்கு இது ஒரு அற்புத மருந்தாக விளங்குகிறது. இதில் டீ வைத்து குடித்தால் சங்கடங்களை உருவாக்கும் தும்மலும் நின்றுவிடும்.

கற்பூரவல்லி தேநீர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்தால் கற்பூரவல்லி தேநீர் தயார்.

தினமும் உணவுக்கு முன்பு இந்த தேநீரை குடித்து வந்தால் தலைநீரேற்றம், தலைவலி சரியாகும். தலை நீரேற்றத்தின் போது தான் கடுமையான வலி, அடிக்கடி தும்மல், மூக்கில் அரிப்பு போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு கற்பூரவல்லி தேநீர் சிறந்த பலனை தருகிறது.

கற்பூரவல்லி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து நோய்களின் தாக்கம் குறையும்.

ஒரு கிராம் கற்பூரவல்லியில் ஆப்பிளை விட 42 மடங்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கற்பூரவல்லி இலைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இந்த இலைகளை தினமும் உட்கொண்டால் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

Share This Article
Exit mobile version