- Advertisement -
Homeசினிமா'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கண்ணன்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கண்ணன்

- Advertisement -

யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ‘மண்டேலா’ திரைப்படத்தையும் விஜய் டிவியில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.

யோகி பாபு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். மலையாளத் திரைப்படமான ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழில் ரீமேக் செய்யபடுகிறது. இந்த திரைப்படத்தை ஆர். கண்ணன் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ராகுல் ரவீந்திரன் பாடகி சின்மயின் கணவர். இந்நிலையில் யோகிபாபு இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

yogi babu

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபு கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மலையாள இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பார்த்து பாராட்டினார்கள். இந்நிலையில் தமிழில் ரீமேக் ஆகும் இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களிடம் வரவேற்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் இயக்குநர் பாலாஜி மோகன் க்ரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ளார். சங்கிலி முருகன், கண்ணன் ரவி உள்ளிட்ட நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். யோகிபாபுவிற்கு ஜோடியாக விஜய் டிவியில் வெளியான ‘அழகிய தமிழ் மகள்’ என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள ‘மண்டேலா’ திரைப்படம் அரசியல் நையாண்டிகளுடன் உருவாகியுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஒய் நாட் ஸ்டியோ தனது திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. ‘ஏலே’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தையும் நெட்பிளிக்சிற்கு வழங்கியது. இதனால் தனுஷுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது,யோகி பாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்கின்றனர்.

 

 

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -