தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் அனைவரின் உதவியும் தேவை – கமல்ஹாசன்

Pradeepa 6 Views
1 Min Read

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைக்கும் நற்பணிக்கு உங்களது அனைவரின் உதவியும் தேவை என கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்(MNM) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான் இங்கு அடிக்கடி வந்து கொண்டு தான் இருப்பேன். தமிழகத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்புள்ளதால், வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும்.

நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறேன். நான் வேறு எந்த தொகுதிகளில் இருந்தாலும் மனம் இங்கு தான் உள்ளது. சட்ட மன்ற தேர்தலில் தொகுதிக்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்து வருகிறோம். அதில், மக்களிடம் கேட்கப்படும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் செயல்படுத்த இருக்கும் திட்டங்களுக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது. தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் நான் மட்டும் தனி நபராக செயல்பட முடியாது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக தேவைப்படுகிறது.

நேர்மை என்பதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். ஏப்ரல் 6ஆம் தேதி அன்று, நேர்மைக்கு வாய்ப்பு தர வேண்டும். என்னை பற்றி விமர்சனம் செய்பவர்கள், வெளியில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இங்கு இருக்க மாட்டார் என கூறுகிறார். ஆனால், அப்படி கூறுபவரே மயிலாப்பூரை சேர்ந்தவர் என்று அவர் பேசியுள்ளார்.

 

Share This Article
Exit mobile version