இன்று முதல் 23 மாவட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி

Pradeepa 1 View
1 Min Read

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பதிப்பின்படி மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பின் பொது வகை-3 இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் நகை கடைகள் மற்றும் துணி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது வகை -2 இல் உள்ள 23 மாவட்டங்களில் உள்ள நகை கடைகள், துணி கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

திருச்சி, அரியலூர், கடலூர், தருமபுரி, மதுரை, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, வேலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி நகை மற்றும் துணி கடைகள் செய்யப்படலாம் என அறிவித்துள்ளது.

பொது மக்கள் மற்றும் வணிக அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Exit mobile version