வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அதனால் இதில் உள்ள இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் இந்த இழப்பு ஏற்படுவதில்லை.
நாம் அன்றாட உணவில் சர்க்கரையை தவிர்த்து வெல்லம் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இது உடல் ஆரோக்கியத்தை காக்கும். நமது முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தை தான் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்லத்தினை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் அதிக இரும்பு சத்து உள்ளதால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவை அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கும்.
ஒவ்வாமையால் வரும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதமாகும். வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை, ஆன்டி அலர்ஜிக் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடையும்.
மேலும் வெல்லத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது நம் உடலின் உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் போன்ற உள் உறுப்புகளை சுத்தமாகவும் உறுதியாகவும் வைக்கின்றது. அதனால் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது நல்லது. இது செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிறது.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல்புழு பிரச்சனையை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு சாப்பிட வேண்டும். அனீமியாவுக்கு இரும்புச் சத்தும் புரதமும் உள்ள உணவை எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு வெல்லம் சிறந்து.
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் சேர்வு, தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு வெல்லம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.
உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமமாக வைக்க வெல்லத்தை பானமாகச் செய்து பயன்படுத்தலாம். இதனால் உடலிற்கு இரும்பு சத்தும், கால்சியமும் கிடைக்கும்.