இசை துறையின் உயரிய விருது isai thurain uyariya viruthugal

sowmiya p 9 Views
2 Min Read

மத்திய அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல விருதுகள்ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதில் மிகமுக்கியமானது 4 விருதுகள் தான். நாட்டின் மிகஉயரிய விருது என்ற பெருமை பெற்றது பாரத ரத்னா. இதற்கு அடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இதுவரை இந்த விருதுகளை எத்தனை பேர் பெற்றுள்ளனர்; எந்த மாநிலத்தில் இருந்து அதிகம் பேர் விருதுகளை பெற்றுள்ளனர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் மத்திய அரசின் www.padmaawards.gov.in என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எந்த மாநிலம் அதிகம்

29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இவ்விருதை அதிகம் பெற்றவர்கள் டில்லி.
இப்பட்டியலில்தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

  • டாப் – 5
  • டில்லி – 797
  • மகாராஷ்டிரா – 756
  • தமிழகம் – 391
  • உ.பி., – 295
  • மே.வங்கம் – 263

எந்த மாநிலம் கடைசி

இப்பட்டியலில் லட்சத்தீவு கடைசி இடத்தில் உள்ளது. இங்கிருந்து ஒருவர் கூட விருது பெறவில்லை.

  • கடைசி 5 இடம்
  • புதுச்சேரி – 6
  • அருணாச்சல் – 5
  • திரிபுரா – 2
  • டாமன் டையூ – 1
  • லட்சத்தீவு – 0

பெண்கள் எத்தனை

விருது பெற்ற 4,329 பேரில், 12 சதவீதம் (519 பேர்) மட்டுமே பெண்கள்.

எந்த நாடு அதிகம்

இந்த விருதுகளை பெற்ற வெளிநாடுகளின் பட்டியலில்அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டை சேர்ந்த 100 பேருக்குஇவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மொத்த விருது

இதுவரை பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் மற்றும்பத்ம ஸ்ரீ ஆகியவிருதுகளை பெற்றவர்களின் எண்ணிக்கை – 4,329 பேர்

பாரத ரத்னா

உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்விருதை இதுவரை 45 பேர் பெற்றுள்ளனர். கலை, இலக்கியம், சமூக சேவையில் சாதனை படைத்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது இது அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு எனமாற்றப்பட்டுள்ளது.

பத்ம விபூஷண்

இது இந்தியாவின் 2வது உயரிய விருது. 1954ல் உருவாக்கப்பட்டது. இதுவரை293 பேருக்குவழங்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன்

இது இந்தியாவின் 3வது உயரிய விருது. 1954ல் உருவாக்கப்பட்டது. இதுவரை 1,225 பேர் இவ்விருதைபெற்றுள்ளனர்.

பத்ம ஸ்ரீ

பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் ஆகிய விருதுகளுக்கு அடுத்து 4வது உயரிய விருது பத்ம ஸ்ரீ.இது 1954ல் உருவாக்கப்பட்டது. இதுவரை 2,766 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

எந்த துறையினர் டாப்

இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கலைத் துறையினர் முதலிடத்தில் உள்ளனர். இத்துறையை சேர்ந்த 930 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

துறை எண்ணிக்கை

  • கலை – 930
  • இலக்கியம், கல்வி- 852
  • மருத்துவம் – 537
  • அறிவியல், இன்ஜினியரிங் – 492
  • சமூக சேவை – 419
  • சிவில் சர்வீஸ் – 417
  • பொது விவகாரம் – 227
  • விளையாட்டு – 211
  • வணிகம், தொழில் – 181
  • மற்றவர்கள் – 63
Share This Article
Exit mobile version