தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ். நியமனம்

Selvasanshi 5 Views
1 Min Read

ஹைலைட்ஸ்:

  • புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
  • இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
  • இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று கொண்டதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனைத்தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும், சுற்றுலா துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.  2019-ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார் இறையன்பு. இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், இரண்டாவது செயலாளராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா நாத் ஐஏஎஸ், மூன்றாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், நான்காவதாக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Share This Article
Exit mobile version