- 14-வது ஐ.பி.எல்,T-20 நேற்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய 3-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- இதையடுத்து கொல்கத்தா அணியின் இன்னிங்சை நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் பவுண்டரியுடன் அதிரடிவுடன் ஆரபித்தனர் சந்தீப் ஷர்மாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி பறக்க விட்ட நிதிஷ் ராணா தொடர்ந்து தனது ஆட்டத்தை காட்டினார்.
- பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்தனர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வந்ததும் இந்த ஜோடி பிரிந்தது. அவரது பந்து வீச்சில் சுப்மான் கில் (15 ரன்) போல்டு ஆனார்.
- ரஷித்கான் ஒரு பக்கம் ரன்களை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் மற்ற பவுலர்களின் பந்து வீச்சை ராணா தெறிக்காவிட்டார் .
- 2-வது விக்கெட்டுக்கு சென்ற ராகுல் திரிபாதியின் மட்டையும் பந்துகளை நான்கு புறமும் பறக்கவிட்டார். புவனேஷ்வர்குமாரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் சேகரித்தனர்.இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரிவழங்கிய நிலையில் தனது 3-வது ஓவரில் இந்த கூட்டணியை பிரித்தார்.
- ஸ்கோர் 146 ரன்களாக (15.2 ஓவர்) உயர்ந்த போது திரிபாதி 53 ரன்களில் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.
- சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ராணா தனது பங்குக்கு 80 ரன்கள் (56 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
- இதற்கிடையே ஆந்த்ரே ரஸ்செல் (5 ரன்) ரஷித்தின் சுழலில் சிக்கினார். கடைசி கட்டத்தில் கேப்டன் இயான் மோர்கன் 2 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் 3 ரன்னிலும் விக்கெட் ஆனார்கள்.
- 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 22 ரன்களுடன் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், டி.நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
- அடுத்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான வார்னர், மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வீசிய முதல் ஓவரில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை கம்மின்ஸ் வீணடித்தார். ஆனாலும் வார்னர் (3 ரன்) நிலைக்கவில்லை.
- அவர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சஹாவும் (7 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
- இதன் பின் ஜானி பேர்ஸ்டோவும் மனிஷ் பாண்டேவும், கைகோர்த்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தனர். பேர்ஸ்டோ 55 ரன்களில் (40 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். ரன்
- தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஐதராபாத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகினர்.
- முகமது நபி (14 ரன்), விஜய் சங்கர் (11 ரன்)எடுத்து வெளியேறினார். ஐதராபபாத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
- கடைசி ஓவரை வீசிய ஆந்த்ரே ரஸ்செல் 11 ரன் மட்டுமே வழங்கி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கொல்கத்தா 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அப்துல் சமாத் 19 ரன்னுடனும், மனிஷ் பாண்டே 61 ரன்களுடனும் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அவுட் ஆகாமல் இருந்தனர்.
- கொல்கத்தா தரப்பில் ஷகிப்அல்-ஹசன், கம்மின்ஸ், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் , பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும்,வீழ்த்தினர்.