- ஐபிஎல் 14ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத வெற்றியைப்பெற்றுள்ளது. இந்நிலையில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துவருகிறது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் ஆட்டத்தை ஆரபித்தனர்.
- வருண் சக்ரவர்த்தி வீசிய சுழற்பந்தைத் தவறாக கணித்துகேப்டன் கோலி, 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டத்தை இழந்தார்.
- அடுத்ததாக ராஜட் படிதரும் ஒரு ரன் சேர்த்து வருண் பந்தில் அவுட் ஆனார். இதனால், பெங்களூர் அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது.
- தொடர்ந்து படிக்கல், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் கைகோர்த்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். கணிசமாக விளையாடிய படிக்கல் 25 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- அடுத்தகட்டமாக கொல்கத்தா அணியின் பந்துவீச்சை டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் இருவரும் சேர்த்து தெறிக்கவிட்டனர்.
- மேக்ஸ்வெல் மூன்று சிக்ஸர்கள் உட்பட 78 (49) ரன்கள் குவித்தார். பின்பு கடைசிவரை களத்தில் இருந்த டிவிலியர்ஸ் 76 (34) ரன்கள் எடுத்து பந்துகளை பறக்கவிட்டார்.
- குறிப்பாக, கடைசி மூன்று ஓவர்களில் டிவிலியர்ஸ், கைல் ஜேமிசன் 11 (4) ரன்கள் எடுத்து பேட்டிங்கை மிரட்டலாக கையாண்டதால், ஆர்சிபி அணி 18 பந்துகளில் 56 ரன்கள் குவித்தது.
- கடைசியில், 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 204/4 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு எட்டமுடியாத இலக்காக கொடுத்தது.
- கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களாக நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். கில் தரமாக விளையாடி 9 பந்துகளில் 21 ரன்ளை எடுத்து ஆட்டத்தை கைவிட்டனர்.
- அடுத்து, நிதிஷ் ராணாவும் (18) ஆட்டத்தை இழந்ததால், போட்டி பெங்களூர் அணிக்கு சாதகமாக திரும்பியது. இதன் காரணமாக, பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் செயல்பட்டனர்.
- இதனால், கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி 25 (20), இயான் மோர்கன் 29 (23), தினேஷ் கார்த்திக் 2 (5) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டத்தை கைவிட்டனர்.
- அடுத்து ஷகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் கைகோர்த்தனர். 25 பந்துகளை எதிர்கொண்டு ஷகிப் 26 ரன்கள் மட்டும் அடித்தார். இருப்பினும், மறுமுனையில் ரஸ்ஸல் ரன்களை மழை போல் பொழிந்தார்.
- இதனால், கொல்கத்தாவிற்கு வெற்றி அடைய சிறிதளவு வாய்ப்பு இருந்தது. கடைசியில் ரஸ்ஸலும் 31 (20) ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 166/8 ரன்கள் மட்டும் சேர்த்து 38 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச்சந்தித்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன் மூன்று விக்கெட்களையும், ஹர்சல் படேல், யுஷ்வேந்திர சாஹல் இருவரும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.