போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது…….

Vijaykumar 4 Views
1 Min Read

திருவாரூரில் 8 வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்யமாறு கோரிக்கைகளை வலியுறித்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்தனர்.

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தோடு, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான குற்ற பத்திரிகை மற்றும் வழுக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் ஒரு வார காலமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும் மற்றும் நாகை தேசிய நெடுசாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்ற விட்டால் தாங்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தெரிவிக்கும் விதமாக பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தபட்டது. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.சுதாகர் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் வெ. சோமசுந்தரம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், சௌந்தரராஜன், மகாலிங்கம் , ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Exit mobile version